அருண் and அஞ்சலி - இவங்க தாங்க நம்ம கதையோட நாயகன் மற்றும் நாயகி. ஒரே காலேஜ் ல் படித்து வந்த இவர்களை, பழக வைத்தது என்னவோ அந்த Electronics lab தான். ஆனால் இவர்களின் காதல், இவர்கள் இருவருமே சேர்ந்து எடுத்த முடிவு தான். நம்ம கதாநாயகி அஞ்சலி, தீர்கமான முடிவு எடுபவள். நிறைவான பொருளை, குறைந்த வார்த்தைகளால் வெளிபடுதுபவள். "Love today" படத்துல சொல்வது போல, அழகு, அறிவு, அன்பு, அடக்கம் அனைத்தும் உடையவள்.
அருண் நிறைய பேசுவான். நன்கு படிப்பான். மிக புத்திசாலி. புதிசாலிகளுக்கே உரிய பிடிவாதம், தைரியம், கர்வம் அனைத்தும் நம்ம ஹீரோ வுக்கும் உண்டு.
ஒருவருக்கு ஒருவர் சொல்லாமலே இருவரும் புரிந்துகொண்டது தான் இவர்களது காதல். பெரியவங்க கிட்ட சொல்லும் நேரம் வந்துடுச்சு னு final year வந்ததும் realize செய்தனர் நமது ஜோடி. அஞ்சலியின் முடிவுகளின் மேல் அவளின் பெற்றோருக்கும் மிகுந்த மதிப்பு இருந்தது. ஆனால் நம்ம அருண் வீட்ல அப்படி இல்லீங்க. காதல்னாலே தடா. அதுலயும் வேற caste பெண்ணுக்கு என்னலாம் சொல்லியிருபாங்கனு உங்களுக்கே தெரியும். "அவங்களே அப்படி சொல்லும் போது நாம மட்டும் என்ன மட்டமா? நீயே யோச்சிக்கோ" என்று அஞ்சலியின் பெற்றோரும் ஒரு போடு போட்டனர். ஏகப்பட்ட பிரச்சனைக்கு பிறகு, முடிவு அஞ்சலியிடம். அருணின் வீட்டைவிட்டு அவனை மட்டும் அழைத்து செல்ல மனமில்லாமல் பிரிந்து விடலாம் என முடிவு எடுத்துவிட்டாள் அஞ்சலி. பெற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காண அவள் விழையவில்லை. இதில் சிறிதும் விருப்பமில்லாமல், தன் பெற்றோர்களையும் சமாதானப்படுத்த முடியாமல், அஞ்சலியையும் விட முடியாமல், குழம்பி போன நிலையில், தன்னால் முடிவெடுக்க முடியாது என்பதை உணர்தான். அஞ்சலியின் முடிவை தானும் ஏற்றுகொண்டான். சிறிது வருடங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல், ஆனால் எடுத்த முடிவில் சிறிதும் மாறாமல் அவர்களின் வாழ்வை சுவையின்றி, நாட்களை கழித்து வந்தனர். ஒவொரு நாளிலும், ஒரு முறையாவுது ஒருவரை ஒருவர் நினைக்காமல் இருந்ததில்லை.
காதல் மலர்ந்ததும் அருணின் கர்வம் அழிந்தது. காதல் பிரிந்ததும் அவனின் பிடிவாதம் ஒழிந்தது. ஒரு வார்த்தைக்கு மேல் அவன் இப்பொழுதெல்லாம் பேசுவதே கிடையாது. மொத்தத்தில் அவன் அவனாக சிறுதும் இல்லை.
ஒரு நாள் அஞ்சலிக்கு அருணிடமிருந்து ஒரு e-mail. தனக்கு திருமணம் என்றும், அஞ்சலி கண்டிப்பாக கல்யாணத்திற்கு வந்து வாழ்த்த வேண்டுமென்றும் எழுதியிருந்தான். மேலும், கல்லூரிக்கு பிறகு தன் வாழ்கையில் என்னென்ன துயரங்கள், மாற்றங்கள் நடந்தது என்றும், தன் would-be அபிராமியை எங்கு சந்தித்து, எவ்வாறு பழகினான் என்றும் சுருக்கமாக எழுதி இருந்தான். பின் குறிப்பாக "வாழ்வில் சிலதை மறப்பது கவலையை குறைக்கும் என்றால், அதை செய்வது தவறில்லை. நீயும் அதை அறிந்து நடப்பாய் என நம்புகிறேன்" என்று முடித்திருந்தான். கடிதத்தை படித்து மிகுந்த யோசனையில் ஆழ்ந்தாள் அஞ்சலி. இது நாள் வரையில் எதற்கு காத்திருந்தோம் என தெரியாமலே காத்திருந்த அஞ்சலி, தனக்கும் ஒரு துணை தேவை என்பதை உணர்ந்தாள். ஒரு முடிவும் எடுத்தாள். அவள் நேரே "இறைவன் இல்லம்" சென்றாள். ஒரு 3 மாத குழந்தையை தத்து பிள்ளை ஆக்கினாள். ஆம், ஒரு குழந்தை தான் அவள் நினைத்த துணை. அவன் தான் அர்ஜுன். சில வருடங்களுக்கு பிறகு, "அம்மா நா ஸ்கூலுக்கு போயிடு வரேன்" என்று அர்ஜுன் ஓட, அவனிடம் அருணிடம் கண்ட அதே பிடிவாதம், கர்வம், புத்திசாலித்தனம் கண்டு மகிழ்ந்தாள் அஞ்சலி. அர்ஜுனிடம் அவள் அருனைதான் தினம் தினம் பார்க்கிறாள்.
தனியாக வாழ்வது ஒரு ஆணுக்கு வேண்டுமென்றால் எளிதாய் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினம் என்பதை உணர்ந்துதான், அன்று அப்படி ஒரு இல்லாத கல்யாணத்திற்கு அழைத்திருக்கிறான் அருண். இப்படி சொன்னாலாவது அஞ்சலி ஒரு துணையை நாடுவாள் என நம்பினான். தன் வாழ்க்கையை இப்படியே "பொது சேவை" யில் ஈடுபட்டு கழித்துவிடலாம் என்று முடிவு எடுத்துவிட்டான். இப்பொழுது ஆதரவை நாடி தன்னிடம் வரும் அனைவருமே அவனுக்கு அஞ்சலி யை போல தான் தெரிகிறார்கள். அதிலேயே தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் அருண். இனி அருணையும் அஞ்சலியையும் யாராலும் பிரிக்க முடியாது என்ற மன நிம்மதியில் அருணும் அஞ்சலியும் தனி தனியே வாழ்ந்து வந்தனர்.
Me and My Pen
Thursday, May 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
I enjoyed reading this story.
Climax is good...
Super Radhi....
Post a Comment