Me and My Pen

Tuesday, September 30, 2008

பிறவி பலன்

கௌரி நம்ம கதையின் கதாநாயகி. நகரத்தில் வளர்ந்து வரும் குட்டி பாப்பா. பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றாலும், தனிமை சிறிதும் அவளை தழுவாமல் பார்த்துகொண்டனர். கௌரி மிகவும் புத்திசாலி. நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் முதல் மாணவியாக வந்தாள். அவளின் ஆசிரியர்களும் நன்கு ஊக்குவித்தனர். ஒரு தடவை முதல் ரேங்க் வாங்கிவிட்டால் போதும், அதுவே எல்லா முறையும் வாங்குவதற்கு அந்த குழந்தைக்குள் ஒரு ஊக்கத்தை குடுக்கும். அபடியே நடந்தது கௌரி விற்கும்.




பெண் குழந்தை என்பதால், அவளின் பத்து வயதிலேயே, பாட்டு கிளாஸ் இல் அவளை அவளின் பெற்றோர் சேர்த்தனர். மிகுந்த ஆர்வத்தோடு அந்த வகுபிற்கும் சென்று வந்தாள். அவளுக்கு அவளின் பாட்டு மிஸ் ஐ மிகவும் பிடித்தது. நன்கு பயின்றாள். சில மாதங்களிலேயே, அவளின் பாட்டு கிளாஸ் மிஸ் வேறு ஊருக்கு transfer ஆகிவிட்டார். மற்றொரு மிஸ் இடம் சேர்ந்தாள் கௌரி. அவளின் முதல் மிஸ் அவளை பாதித்த அளவு இவர் இல்லை. அதுவே பாட்டு கிளாஸ் மீது அவளின் ஈடுபாட்டை குறைத்தது. அவள் போவதையே மெல்ல மெல்ல நிறுத்திவிட்டாள். அவளின் பாட்டு கிளாஸ் episode ஒரு வருடத்திலேயே முடிந்தது. ஆயினும் பெரியவர்கள் பாட சொன்னால் தயங்காமல் பாடுவாள். சின்ன பொண்ணு ஆசையா பாடும் போது, யாருக்கு தான் பிடிக்காமல் போகும், நன்றாக இருந்ததோ இல்லையோ, அனைவரும் பாராட்டுவர்.

நாட்கள் மிக வேகமா ஓடியது. அவளுக்கு நன்கு பாட வேண்டும் என்று மிகவும் ஆசை. கௌரி வளர வளர, அவள் சரியாக பாடுவதில்லை என்பதும், அவள் நன்கு பாட, இன்னும் நன்கு பயில வேண்டும் என்பதை உணர்ந்தாள். நன்றாக பாடுபவர்களை பார்த்தாலே தன்னை மிகவும் தாழ்வாக கருதுவாள். இந்த எண்ணமே அவள் பொது இடங்களில் பாடுவதை மெல்ல மெல்ல குறைத்துவிட்டது. பெரிய பெண் ஆனதால், சிறு பெண்கள் நடுவில் மறுபடியும் பாட்டு கிளாஸ் செல்ல சிறுது வெட்கமாக இருந்தது.

பனிரண்டாம் வகுப்பு முடித்து, கல்லூரியில் சேர்ந்தாள். அங்கும் பாடம், தோழிகள், விடுதி வாழ்க்கை என்று இருந்துவிட்டாள். நன்கு பாட வேண்டும் என்கிற அவளின் ஆசை, நிறைவேறாமலே இருந்தது. தைரியமாக யார் முன்னும் பாடமாட்டாள். தனிமையில், பொழுது போகவில்லை என்றால், அவளே எதாவுது பாடிகொண்டிருப்பாள். கல்லூரி வாழ்க்கை முடித்து, நல்லதொரு பணியில் சேர்ந்தாள். அவளின் திருமணத்திற்கு பார்த்துக்கொண்டிருந்தனர் அவளின் பெற்றோர். தன் வருங்கால கணவர் நன்கு பாடுபவராக இருந்தால், அவரிடமாவுது கற்க வேண்டும் என்று நினைத்தால் கௌரி.

உறவுகளிடம் பாடம் பயில்வது மிகவும் கடினமானது என்று தான், அன்னையர் முதல் வகுப்பிலேயே குழந்தைகளுக்கு tuition அனுப்புகிறார்கள் போல். இந்த உறவிலும், அது கடின மாகத்தான் இருந்தது. வேலைக்கு செல்வதும் , வீட்டு வேலை செய்வதுமாக , கௌரிக்கு சரியாக இருந்தது.

வாய் திறந்து அவள் பாடியே நிறைய நாட்கள் ஆனது. இந்த நாட்களில், அவளின் ஆசையை அவள் மறந்தே விட்டாள். ஒரு அழகான நாளில், அவள் சில மாதங்களில் தாய் ஆகபோகும் நற்செய்தி தெரிந்தது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அவளின் எழாவுது மாதத்திலிருந்தே maternity leave எடுத்துவிட்டாள். அம்மாவின் வீட்டில், full rest அவளுக்கு. பொழுது போவதற்கும், குழந்தையின் நல்ல வளர்ச்சிக்காகவும் , நல்ல புத்தகங்கள் படிப்பாள். நல்ல பாடல்களை கேட்பாள். நல்ல கடவுள் பாடல்கள், திரை இசை பாடல்கள், என்று நிறைய பாடல்களைக் கேட்பாள். வீட்டில் தனிமையில் , தானே தனக்கு பிடித்த பாடல்களை பாடுவாள்.

குழந்தையும் பிறந்தது. அழகான பெண் குழந்தை. அவளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அந்த குழந்தை, சுஷீலா, ஜானகி பாடல்கள் cassette போட்டாலும், தன் அப்பா பாடினாலும், தூங்காமல் அழுதுகொண்டிருக்கும். கௌரி பாடினால் போதும், அமைதியாகி, அசர்ந்து தூங்கிவிடும். அந்த ஒரு நொடியில், தன் நிறைவேறாத ஆசை, நினைவில் வந்து, பிறவியின் பலனே அடைந்ததாக மகிழ்ந்தாள் கௌரி.

இப்பொழுது அவள் அனைவருக்கு முன்னும் சிறிதும் தயங்காமல் பாடுவாள். அவளுக்கு அங்கு தெரிவது அவள் குழந்தையின் மழலை சிரிப்பு மட்டும் தான்.

6 comments:

Anonymous said...

nalla dhan erukku !

Anonymous said...

Radhika .. since i knew your special intrest about songs & music , i could imagine you only instead of Gowri.. :) Shravan a nalla paatu class la serthudalam.. kavalai padathe...

Muranz said...

Gowri alias Rad ?? Can't help to note the similarities! You've expressed the sheer joy of motherly affection & pride really well! kudos to you :)

Anonymous said...

Can see that you are really enjoying your motherhood!!

Sharvan un paatu ketu than toongaran pole iruke.. :)

Anonymous said...

hey nice title too!

Soumi said...

Enjoyed the story... So true... For the first part, felt like seeing myself...