Me and My Pen

Thursday, November 20, 2008

வாழ்க வளமுடன்

என் பேர் தீபா. அனுவும் நானும் ஒரே பள்ளியில் படித்து வந்தோம். அனு மிக நன்றாக படிக்கும் பெண். வகுப்பில் எப்பொழுதுமே முதல் மதிப்பெண் வாங்குபவள். நா ஒண்ணும் கொர்ரச்சல் இல்லீங்க.. இரண்டவுது மூன்றாவுது அதிகபட்சமா ஐந்தாவதுகுள்ள வந்துடுவேன். ஆனாலும் ஒத்துக்கவேண்டிய விஷயம், அவளின் புத்திசாலித்தனம், IQ , தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துக்கு முன்னாடி, நானெல்லாம் ஒண்ணுமில்லீங்க...


இப்போ நாங்க வாழ்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கோம். பிள்ளைகளை விட பெற்றவர்கள் அதிகம் tension ஆகும் வருடம். பெற்றவர்களுக்கு அதிகம் home work இருக்கும் வருடம். பனிரெண்டாம் வகுப்பு. எப்படாப்பா பரீட்சை வரும், ஒன்றரை வருஷமா படிச்சத எல்லாம் பரீட்சை பேப்பர்ல கொட்டிட்டு வந்திடலாம் னு நாங்கெல்லாம் காத்திருந்தோம்.


ஒரு வழியா முப்பது நாட்கள்ல எல்லாம் பேப்பர் உம் முடிஞ்சிது. சரி, ஒரு தலை வலி முடிஞ்சிது னு பெருமூச்சு விட்ரதுகுள்ள, அடுத்து இடி போல வர போற நுழைவுத் தேர்வுக்கு படிக்கணும். ஒரு நாள் கொஞ்சம் relax பணிகலாம்னு, marina beach போகலாம்னு நாங்க friends கொஞ்சம் பேரு decide பண்ணினோம்.


அன்று தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது... எங்கள் bus உம் எதிரே வந்த bus உம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவிருக்கும் தருவாயில், அதிர்ச்சியில் அனைவரும் திக்குமுக்காடினோம்... நான் நினைவிழந்து விட்டேன். கண் விழித்து பார்க்கும் பொழுது, என் தாயாரின் அழுகை கேட்க, என் தந்தையின் சோர்ந்த முகம் தெரிய, என் அண்ணனின் கை என் கைகளை பிடிக்க, அம்மா என்று நான் அலற, என் அத்தனை புலன்களும் வேலை செய்வதை உணர்ந்து அவ்வளவு துக்கத்திலும் ஒரு புன்னகை வர தான் செய்தது..


என் கைகளிலும், முகத்திலும், நிறைய கண்ணாடி துண்டுகளின் காயம், இடது காலில் fracture , அகங்கே நிறைய இடங்களில் stitches என்று அம்மா அழுதுகொண்டே கூறினாள். சரி hospital லில் இருந்தே நுழைவுத் தேர்வுக்கு படிக்க வேண்டியது தான் என்று நினைத்துகொண்டேன்... சரி, அனு, மீனா, பவித்ரா, வேணி எல்லாரும் எப்படி இருகாங்க??? எல்லாருக்கும் உன்ன மாதிரி கொஞ்சம் கொஞ்சம் காயம்.. ஆனா, நம்ம அனுவுக்கு தான்.. என்று இழுத்தாள் அம்மா...
"என்னம்மா ஆச்சு?? சீக்கரம் சொல்லு?? எனக்கு பயமா இருக்கு" என பதறினேன்... என் வாழ்க்கையில் நான் மிகவும் துடிதுடித்த தருணம் அது. "அவளின் வலது காலை cut பண்ணி எடுத்து, artificial leg பொறுத்த போறாங்களாம் " என்று மெதுவாய் சொன்னாள்.

"என்ன கொடுமை இது??, இறைவன் மீது எனக்கு மிகுந்த கோபம் வந்தது... ஒன்றுமே புரியாதது போல் இருந்தது. இதெல்லாம் ஒரு கனவாக இருக்க கூடாதா! நாளைக்கு மறுபடியும் எங்களின் இறுதி பரீட்சை இருக்க கூடாதா!" என்று என் மனம் மிகவும் விரும்பியது... என்னால் அனுவை எதிர் கொள்ளவே முடியவில்லை. ஒரு வாரம் இப்படியே போனது... அனு வீட்டுக்கு வர, இன்னும் இரண்டு வாரம் ஆகும் என்று அவளின் தாயார் சொன்னார். இது நாள் வரையில், அவளின் தாயாரிடம் மட்டும் தினமும், அனு எப்படி இருக்கிறாள் என்று கேட்டு கொள்வேன். தினமும் அழுதுகிட்டே இருக்கிறாள் என்றும், ரொம்ப பயமா இருக்கு எதாவுது செய்துகுவாளோ என்றும் கவலை பட்டார்.. மனம் சிறிதும் புத்தகத்தின் பக்கம் வரவில்லை. அன்று அனுவை பார்க்க தைரியத்தை வரவழைத்து கொண்டு அவளின் அறைக்குச் சென்றேன். அழுது அழுது கண்கள் இரண்டும் வீங்கி இருந்தது... எனக்கு அடுத்த நொடி அழுகை வந்து விட்டது..


"நானும் இப்படி தான் அழுதுற்றுந்தேன் 1 week ஆ. இனிக்கி morning தான் "இனி அழக்கூடாது னு decide பணிருக்கேன்" என்று அழுதுகொண்டே சொன்னாள். "நமக்கு ரொம்ப பிடிச்சவங்க ள நாம எழந்துட்ட, அந்த துக்கத்த நம்மால தாங்கவே முடியாது.. ஆனா, நாம அத மறந்து நம்ம வாழ்கையை தொடரத்தான் வேணும்.. அதுபோல், எனக்கு உறுதுணையா இருந்த என் காலின் இழப்பை, நான் ஏத்துக்கொண்டு, என் வாழ்கையை தொடரத்தான் வேண்டும்.. வேற வழியே இல்லன்னு இருக்ரப்போ, அத நெனச்சு வருத்தபட்ரதால எந்த பயனும் இல்ல. இனி என்னுடைய artificial leg நான் நடக்க உறுதுணைய இருக்கும். இத சொல்றது ரொம்ப சுலபம்.. வாழறது கஷ்டம்.. பாப்போம்.. சரி, நான் என் அப்பா கிட்ட physics book எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன்.. இன்னும் 3 weeks தான் இருக்கு... படிக்க ஆரம்பிக்கணும்.. நீ எந்த chapter படிக்க ஆரம்சிருக்க? " என்று அழகாக பேச்சை மாற்றினாள்... நானும், அன்று படிப்பைப் பற்றிய பேச்சை தொடர்ந்துவிட்டேன்..

இவ்ளோ நடந்திருந்தும், தேர்வில் அவள் தன் முதல் மதிப்பெண். என்னால் அந்த ஒரு மாதம் ஒன்றுமே படிக்க முடியல... வெளியூரில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தாலும், அனுவின் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி அவளை எங்க ஊரு கல்லூரியிலேயே சேர்த்தார்கள். என் entrance marks கொஞ்சம் கொரஞ்சதால, நானும் எங்க ஊரு காலேஜ் ல தான் சேர்ந்தேன்... அனு என்னை பலமுறை பிரமிக்கவைதிருக்கிறாள். ஆனால் , எனக்குள் ஒன்று, அவளின் மகிழ்ச்சிக்காக என்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்துக்கொண்டிருந்தது..

ஒரு முறை, PT hour ல, எல்லாரும் Volley Ball விளையாடிற்றுந்தாங்க.. அனு ஒரு மரத்தடியில் அமர்ந்து பாத்துகிற்றுந்தா.. நா கொஞ்சம் லேட் ஆ வந்தேன்.. "சரி, வா அனு, நாம அந்த பக்கம் போகலாம்" னு அவளை திசை திருப்ப பார்த்தேன்.. "ஏன், எனக்கு கஷ்டமா இருக்கும் னு நினைகிரியா? கண்டிப்பா இல்ல.. என் கால்கள் நல்ல இருந்த்ருந்தா கூட நான் ரொம்ப நேரம் இதெல்லாம் விளையாடிருக்க மாட்டேன். இப்படி வேடிக்கை தான் பாத்துகிற்றுந்த்ருபேன். இப்போ மட்டும் ஏன் எல்லோரும் என்ன பாவமா பாக்றீங்க?... அபடியே எனக்கு எதாவுது விளையாடனும் னு தோநிசுன்ன, நா Chess இல்ல carrom விளையாடறேன்.. நீ ரொம்ப feel பண்ணாத னு" சிரிச்சுகிட்டே சொன்ன.."ஒரு வேளை நான் dancer ஆ இருந்து, என் கால்களை இழந்திருந்தால், mabe அப்போ ரொம்ப கஷ்டபற்றுப்பென இருக்கும்..." என்றும் சொன்னாள். ஆனா, அவள் கண்டிப்பா அப்பவும் feel பண்ணிருக்க மாட்டாள். "இவ்ளோ நாள், என் கால்கள் இருந்துது.. dance ஆடினேன்.. இப்போ வேற எதாவுது கத்துக்ரேனே!" என்று சொல்லி இருப்பாள்.


எங்கள் படிப்பு முடிந்ததும், இருவரும் வேலைக்குச் சேர்ந்தோம்.. படிப்பிலும் சரி, வேலைக்கு தேடும்போதும் சரி, எந்த வித quota வும் பயன் படுத்த கூடாது என்பது அவளின் முடிவு... எவ்வளவு தான் அவள் அவளின் ஊனத்தை மறக்க முயன்றாலும், இந்த ஊர் அவளை பாவம், பரிதாபம் போன்ற உணர்ச்சிகளால் ஞாபகம் படுத்திக்கொண்டே இருந்தது,... இது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது... எப்படியாவுது அவளுக்கு வெகு தொலைவான ஒரு தனி உலகத்துக்கு transfer ஆகணனும் னு நா வேண்டிகாத கடவுள் இல்ல.. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.. ஒரு consultant மூலமாக America வில் வேலை செய்ய விசா ஏற்பாடு செய்யும் நபரின் அறிமுகம் கிடைத்தது... அனு வை எப்படியாவது சமாளித்து apply பண்ண வைத்தேன்,... கண்டிப்பா கெடச்சிடும்.. இந்த மாற்றம் அவளுக்கு சுதந்திரத்தையும், மன சாந்தியையும் தரும்..


என்னடா நான், அனுவைப் பத்தி இவ்ளோ கவலை படறேன்னு பாக்ரீங்கள.. இது அவளிடம் எனக்கு இருந்த நட்புக்காக மட்டும் இல்ல... infact, அந்த நாளிலிருந்து தான், எங்கள் நட்பு வலுவானது. இது ஒரு குற்ற உணர்ச்சியினால் தான்... அன்னிக்கி நானும் மீனாவும் beach கு போக plan செஞ்சப்போ, அனு கண்டிப்பா வர மாட்டேன்னு சொன்ன... "ஒரு நாள் தான, எங்களோட வந்தா, ஒன்னும் கொரஞ்சிடாது, உனக்கு ஒண்ணும் ஆகாம, பத்ரமா வந்து சேதுடறேன்னு வலு கட்டாயப்படுத்தி அவள கூட்டிட்டு போனேன்... நாங்க எல்லாம் டைம் வேஸ்ட் பண்ணும் போது, அவ மட்டும் படிசிடகூடாதுங்க்ற பொறாமைல தான் force பண்ணேன்.. அப்படி நான் செய்யாமல் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடக்காமல் இருந்த்ருக்கும்.. இப்படி அவளுக்கு ஆனதுக்கு ஒரு வகையில நானும் காரணம்ங்கற குற்ற உணர்ச்சி... அதற்க்கு மேல், இதுவரை, அப்படி ஒரு முறை கூட அவள் சொல்லிக் காட்டியதில்லை... அதுவே என் மனப் போராட்டத்தை இன்னும் அதிகரித்தது...

என்னுடைய அந்த சின்ன புத்தியின் விளைவாய், நேரடியாக அந்த நிகழ்வுக்கு நான் காரணம் இல்லை என்றாலும், ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போதும், முள் மீது நடப்பது போல் துடி துடித்து போகிறேன்.. அவள் எப்பொழுதும் நிதானமாகத்தான் இருக்கிறாள். "கெட்டாலும் மேண் மக்கள் மேண் மக்களே" அதுதான் அனு. அவளை நன்கு புரிந்துகொண்டவரும், அவளுக்கு மிகவும் பிடித்தவருமான ஒருவர் அவளை மணம் புரிய மனமார வாழ்த்துகிறேன்.

Monday, November 3, 2008

அவள் அப்படித்தான்

ஒரு நிறுவனத்தில் கணிபொறி பிரிவில் பணியாற்றி வந்தனர் மூவர் . வித்யா, சீதா, மற்றும் அர்ச்சனா. இதில் அர்ச்சனா, மிக அமைதியான பெண். மற்ற இருவரும் நன்கு அரட்டை அடிக்கும் ஆசாமிகள். இவர்கள் இங்கு சேர்ந்த பிறகே அறிமுகமானவர்கள். இவர்களின் வேலை நேரம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து வரை .

வித்யா மற்றும் சீதா கல்லூரி விடுதியிலிருந்து படித்தவர்கள். மிக சகஜமாக அனைவரிடமும் பழகுவார்கள். அர்ச்சனா, வீட்டு கோழி. என்றுமே பெற்றோரின் நிழலிலேயே பொத்தி பொத்தி வளர்ந்தவள். தினமும் தன் வேலையை முடித்து அரசு அலுவலகம் போல், சரியாக, ஐந்து மணி ஆனவுடன் கிளம்பிவிடுவாள். ஆனால், மற்ற இருவரும் , மணிக்கு ஒரு முறை Tea-break , ஒரு மணி நேரம் Lunch-Break என்று கல்லூரி போல் ஜாலியாக பணி புரிய விரும்புவார்கள்.

இவர்கள் இருவரும் மெயில் செக் செய்வது, blogs படிப்பது, chat செய்வது, செய்தி தாள் வாசிப்பது, games விளையாடுவது என்று ஒரு கணினி கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்வர். பின்பு அதை பற்றி break களில் discussions . எட்டு மணிக்கு கம்மியா இருவரும் அலுவலகத்தை விட்டு கிளம்பினதா, சரித்திரமே இல்ல. இவர்களின் வேலையில் எந்த வித குறையும் இல்லாததால், மேனேஜர் இடம் இவர்கள் மூவருக்கும் நல்ல பெயர் தான்.

வேலை பொழுது போக்கு போல் செய்தால், சுகமாக இருக்கும் என்று எப்பொழுதும் அர்ச்சனா வை சீண்டுவார். அந்த வாதத்தை வளர்த்தால், எங்கு நேரம் போய்விடுமோ என்று அஞ்சி அவள் வாக்கு வாதத்தை வளர்க்க விரும்பவில்லை.

வித்யா மற்றும் சீதா browse செய்யும் technical sites வேறுபட்டிருந்தாலும்,
இவர்கள் இருவரின் favourite blog "பெண்ணுக்குள் ஓர் உலகம்". மது என்பவளால் எழுதப்படுவது.

"வீடு, வேலை, சாப்பாடு, தூக்கம், தொலைக்காட்சி னு இல்லாம, எதாவுது hobby இருக்கவேண்டாமா, then only you will know about many things. " என்று, இவர்கள் இருவரும் அர்ச்சனா விற்கு நிறைய முறை advice செய்திருக்கிறார்கள். "மதுவின் blog யவுது படி... நல்ல கதைகள், கவிதைகள், னு அசத்தலா எழுதி இருக்கா. எவ்ளோ followers தெரியுமா அவளோட blog க்கு?. அவ்ளோ நல்ல இருக்குன்னு அர்த்தம். சும்மா ஒரு முறை படிச்சு பாரு.. பிடிகலன்ன, free விட்டுடு... அது தவிர, இன்னும் எவ்ளவோ பண்ண முடியும் free time ல. சரியான நேரத்துல வீட்டுக்கு போய், அம்மா கு சமையல் ல உதவி செஞ்சு, தம்பி க்கு படிப்பு சொல்லிகுடுக்றது மட்டும் இல்ல வாழ்கை. நீயா நெறைய கத்துக்கணும் எங்கள போல!" னு ஒரு நாள் பயங்கர advice. என்ன சொல்லி என்ன, எப்பவுமே அர்ச்சனா வின் பதில் ஒரு புன்னகை மட்டும் தான்.

அன்று, வீட்டுக்கு வந்தவுடன், வித்யா, சீதா சொன்னது ஞாபகத்திற்கு வந்தவளாய், முதல் வேலையாக மதுவின் blog இற்கு சென்றாள். archana.ramkumar@gmail.com user ID வைத்து login செய்தாள். நம்ம அர்ச்சனா தான், மது என்ற புனை பெயரில், "பெண்ணுக்குள் ஓர் உலகம்" என்கிற வலைபதிப்பை எழுதுபவள்.

அர்ச்சனா வின் தாயார், "என்னம்மா, இன்னிக்கு வந்தவுடன், கம்ப்யூட்டர் முன்னாடி??" அர்ச்சனா அதற்க்கு "திவ்யா வும் சீதாவும் இன்னிக்கி வாழ்க்கையில் எதாவுது செய்யணும் னு ரொம்ப அட்வைஸ் பண்ணினாங்க. அதை வெச்சி ஒரு கதை தோணித்து. அது தான் உடனே எழுதிடலாம்னு வந்தேன்."

தாயார்: "நீ தான் அந்த blog எழுதறேன்னு சொல்லலாம்ல அவங்க கிட்ட?"

அர்ச்சனா : "வேண்டாம் மா. அப்றோம் அவங்க கேள்விகள், discussions எல்லாத்துல நானும் பங்கேற்க வேண்டி இருக்கும். அப்றோம் எழுதறது கொறஞ்சி அதை பத்திய பேச்சு அதிகமாகிவிடும். அது மட்டும் இல்லாமல், இப்படி எழுதினால், அவங்க நம்ள பத்தி என்ன நினைப்பாங்களோ, அப்படி எழுதினால், நானும் அப்படி தான்னு நினைபான்களோ, அப்படி பட்ட எண்ணங்கள் என் எழுத்து சுதந்திரத்தையே பரிச்சிடும். I have to write for others, if it is my profession. But writing is my hobby and I want to write it for me. நா எழுதறேன்னு சொல்லாமலே, விமர்சனங்கள் கேடசிடுது. இது போதுமே எனக்கு. அதுக்கு தான், என் நெருங்கிய நண்பர்களிடம், நான் படிச்சது னு சொல்லி என் blog post a நானே forward பண்ணினேன். இப்போ அதைபத்தி என் கூட வேலை செய்றவங்க எனக்கே சொல்றாங்க.

தாயார்: எல்லாத்துக்கும் எதாவுது பதில் வெச்சிருபியே!.

என்று தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்.

Wednesday, October 15, 2008

Richness

Richness doesnot depend on what u earn, but on how u spend.

Sunday, October 12, 2008

கடவுளே இது என்ன சோதனை!

என் பெயர் பாலு. நான் இந்த ஊருக்கு வரும்பொழுதே  அழுதுட்டு தாங்க வந்தேன். ஏனென்றால்  எனக்கு இங்க யாரையும் முன்ன பின்ன தெரியாது. சித்ரா வை போய் பாரு , வேலை குடுப்பாங்கன்னு சொல்லி அனுப்சுவிட்டுடாங்க. அவங்கள நான் பார்த்தது கூட கிடையாது. அவங்களை பார்த்தேன். நல்லவங்களா  தான் தெரிஞ்சாங்க. ஆனா யாரையும் நம்ப முடியாதுலீங்களா... கொஞ்சம் அளவா தான் பழகினேன்.. கொஞ்சம் பயமா இருந்தது. அவங்க வீட்ல நான் யார்கிட்டயும் அதிகம் பேச கூட மாட்டேன். என்ன அவங்க வீட்லயே ஒரு தனி ரூம் ல தங்க சொல்லிடாங்க..



சித்ரா ங்கறவங்க பெரிய வேலைல இருகிறதா சொன்னாங்க.. ஆனா, எப்பவும் வீட்ல தான் இருக்காங்க.. இவங்க எனக்கு என்ன வேலைபோட்டு  குடுக்க போறாங்களோன்னு சந்தேகமாத்தான் இருக்கு...




என்ன குடும்பம் யா அது?. என்ன யாரும் என் பேர் வெச்சி கூட  கூப்பிடறது இல்ல. வாய்க்கு வந்தத கூப்பிடறாங்க... எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. அவங்க வீட்ல நாலு பேரு தான் இருக்காங்க.. ஒரு நாள் கூட, அவங்க சாப்பிடும்போது என்ன கூப்பிட்டதில்ல. தனியா தான் எனக்கு என்னிக்குமே சாப்பாடு.என்ன செய்றது, இவங்க எல்லாம் அப்படி தான்னு விட்டுட்டேன்..
எப்பவுமே எனக்கு தெரியாம, யாரவுது என்ன கவனிச்சிட்டு இருக்காங்க.. ஒரு வேளை இவன் ஒழுங்கா  வேலை செய்வானான்னு அவங்களுக்கு சந்தேகமாயிருக்கும்னு நினைக்கிறேன்.





இப்படியே, எனக்கு என்ன வேலை , அவங்க என்ன வேலை செய்றாங்க, இதெல்லாம் மர்மமாகவே இருந்தது. திடீர்னு ஒரு நாள், வெளியில போயிருந்தப்போ, என்ன ஒருத்தன், பயங்கரமா கத்தி போல எதையோ வெச்சி குத்த வந்தான். நானும் அவன எதிர்த்து பார்த்தேன். முடியல. இவங்க எல்லாம் எனக்கு உதவி கூட பண்ணாம, எதையும் பார்க்காதவங்க மாதிரி இருகாங்க. நல்ல வேளை, பெருசா எதும் இல்ல, சின்ன காயம் தான். என் திறமையை சோதிக்க இவங்களே அனுப்ச்ச ஆளா இருக்கும்னு நினைக்கிறேன்... ஐயோ, தோற்று போய்டோமே, வேலை குடுக்காம போயிடுவாங்களோ!...





மறுநாள், பாலு  "கடவுளே, என்ன ஏன் இந்த கொடுமைகாரங்க கிட்ட அனுப்ச்ச!..." என்று புலம்பிய போது, "பாலு , நீ பொறந்து ஒரு வாரம் தான் ஆகுது. உன் தாயார் சித்ரா, உன்ன நல்லா  பார்த்துப்பாங்க.. அவங்க எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான். நீ வளர வளர அது உனக்கே புரியும். இப்போ நிம்மதியா தூங்கு" என்று இறைவன் பதில் சொன்னார். அதை கேட்ட பாலுவின்  முகத்தில் ஒரு சிறு புன்னகை.
"ஹே, சீக்கரம் இங்க வந்து பாருங்களேன்.. முதல் முறையா சிரிக்கிறான். நல்லா  இருக்குல்ல!... நேத்து போட்ட தடுப்பூசினால , ரொம்ப அழுவானோன்னு நெனச்சேன்.. நல்ல வேளை normal ஆ தான் இருக்கான்.. " என்று சித்ரா அவளின் அம்மா, அப்பா, கணவரிடம் கூறினாள்.

Tuesday, September 30, 2008

பிறவி பலன்

கௌரி நம்ம கதையின் கதாநாயகி. நகரத்தில் வளர்ந்து வரும் குட்டி பாப்பா. பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றாலும், தனிமை சிறிதும் அவளை தழுவாமல் பார்த்துகொண்டனர். கௌரி மிகவும் புத்திசாலி. நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் முதல் மாணவியாக வந்தாள். அவளின் ஆசிரியர்களும் நன்கு ஊக்குவித்தனர். ஒரு தடவை முதல் ரேங்க் வாங்கிவிட்டால் போதும், அதுவே எல்லா முறையும் வாங்குவதற்கு அந்த குழந்தைக்குள் ஒரு ஊக்கத்தை குடுக்கும். அபடியே நடந்தது கௌரி விற்கும்.




பெண் குழந்தை என்பதால், அவளின் பத்து வயதிலேயே, பாட்டு கிளாஸ் இல் அவளை அவளின் பெற்றோர் சேர்த்தனர். மிகுந்த ஆர்வத்தோடு அந்த வகுபிற்கும் சென்று வந்தாள். அவளுக்கு அவளின் பாட்டு மிஸ் ஐ மிகவும் பிடித்தது. நன்கு பயின்றாள். சில மாதங்களிலேயே, அவளின் பாட்டு கிளாஸ் மிஸ் வேறு ஊருக்கு transfer ஆகிவிட்டார். மற்றொரு மிஸ் இடம் சேர்ந்தாள் கௌரி. அவளின் முதல் மிஸ் அவளை பாதித்த அளவு இவர் இல்லை. அதுவே பாட்டு கிளாஸ் மீது அவளின் ஈடுபாட்டை குறைத்தது. அவள் போவதையே மெல்ல மெல்ல நிறுத்திவிட்டாள். அவளின் பாட்டு கிளாஸ் episode ஒரு வருடத்திலேயே முடிந்தது. ஆயினும் பெரியவர்கள் பாட சொன்னால் தயங்காமல் பாடுவாள். சின்ன பொண்ணு ஆசையா பாடும் போது, யாருக்கு தான் பிடிக்காமல் போகும், நன்றாக இருந்ததோ இல்லையோ, அனைவரும் பாராட்டுவர்.

நாட்கள் மிக வேகமா ஓடியது. அவளுக்கு நன்கு பாட வேண்டும் என்று மிகவும் ஆசை. கௌரி வளர வளர, அவள் சரியாக பாடுவதில்லை என்பதும், அவள் நன்கு பாட, இன்னும் நன்கு பயில வேண்டும் என்பதை உணர்ந்தாள். நன்றாக பாடுபவர்களை பார்த்தாலே தன்னை மிகவும் தாழ்வாக கருதுவாள். இந்த எண்ணமே அவள் பொது இடங்களில் பாடுவதை மெல்ல மெல்ல குறைத்துவிட்டது. பெரிய பெண் ஆனதால், சிறு பெண்கள் நடுவில் மறுபடியும் பாட்டு கிளாஸ் செல்ல சிறுது வெட்கமாக இருந்தது.

பனிரண்டாம் வகுப்பு முடித்து, கல்லூரியில் சேர்ந்தாள். அங்கும் பாடம், தோழிகள், விடுதி வாழ்க்கை என்று இருந்துவிட்டாள். நன்கு பாட வேண்டும் என்கிற அவளின் ஆசை, நிறைவேறாமலே இருந்தது. தைரியமாக யார் முன்னும் பாடமாட்டாள். தனிமையில், பொழுது போகவில்லை என்றால், அவளே எதாவுது பாடிகொண்டிருப்பாள். கல்லூரி வாழ்க்கை முடித்து, நல்லதொரு பணியில் சேர்ந்தாள். அவளின் திருமணத்திற்கு பார்த்துக்கொண்டிருந்தனர் அவளின் பெற்றோர். தன் வருங்கால கணவர் நன்கு பாடுபவராக இருந்தால், அவரிடமாவுது கற்க வேண்டும் என்று நினைத்தால் கௌரி.

உறவுகளிடம் பாடம் பயில்வது மிகவும் கடினமானது என்று தான், அன்னையர் முதல் வகுப்பிலேயே குழந்தைகளுக்கு tuition அனுப்புகிறார்கள் போல். இந்த உறவிலும், அது கடின மாகத்தான் இருந்தது. வேலைக்கு செல்வதும் , வீட்டு வேலை செய்வதுமாக , கௌரிக்கு சரியாக இருந்தது.

வாய் திறந்து அவள் பாடியே நிறைய நாட்கள் ஆனது. இந்த நாட்களில், அவளின் ஆசையை அவள் மறந்தே விட்டாள். ஒரு அழகான நாளில், அவள் சில மாதங்களில் தாய் ஆகபோகும் நற்செய்தி தெரிந்தது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அவளின் எழாவுது மாதத்திலிருந்தே maternity leave எடுத்துவிட்டாள். அம்மாவின் வீட்டில், full rest அவளுக்கு. பொழுது போவதற்கும், குழந்தையின் நல்ல வளர்ச்சிக்காகவும் , நல்ல புத்தகங்கள் படிப்பாள். நல்ல பாடல்களை கேட்பாள். நல்ல கடவுள் பாடல்கள், திரை இசை பாடல்கள், என்று நிறைய பாடல்களைக் கேட்பாள். வீட்டில் தனிமையில் , தானே தனக்கு பிடித்த பாடல்களை பாடுவாள்.

குழந்தையும் பிறந்தது. அழகான பெண் குழந்தை. அவளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அந்த குழந்தை, சுஷீலா, ஜானகி பாடல்கள் cassette போட்டாலும், தன் அப்பா பாடினாலும், தூங்காமல் அழுதுகொண்டிருக்கும். கௌரி பாடினால் போதும், அமைதியாகி, அசர்ந்து தூங்கிவிடும். அந்த ஒரு நொடியில், தன் நிறைவேறாத ஆசை, நினைவில் வந்து, பிறவியின் பலனே அடைந்ததாக மகிழ்ந்தாள் கௌரி.

இப்பொழுது அவள் அனைவருக்கு முன்னும் சிறிதும் தயங்காமல் பாடுவாள். அவளுக்கு அங்கு தெரிவது அவள் குழந்தையின் மழலை சிரிப்பு மட்டும் தான்.

Tuesday, September 9, 2008

Good old ones - Mechanic vs Doctor

A mechanic challenged a Doctor, saying "its the same kind of job both of us do. A car is similar to a human body. It has Engine similar to heart, spare parts like different body parts. You take care of the heart, work on the different body parts if they r injured. I also do the same in a car. Why is it that you have good recognition in the society which I dont... "

The Doctor replied "You are right. But, try working on ur car, when the engine is On"

Mechanic : !!$#@Q!!

Saturday, September 6, 2008

காதல் கல்யாணம்

மறுபடியும் ஒரு காதல் கதை தான். இல்லீங்க, இது முதல் முறையா ஒரு கல்யாணக் கதை.

மீனா, இந்த காலத்து, தங்களை தாங்களே புரட்ச்சி பெண்கள் னு சொல்லிக்கிற கூட்டத்தை சேர்ந்தவள். ஆம், ஒரு சாப்ட்வேர் நிறுவனித்தில் நல்ல சம்பளத்திற்காக பணி புரியும் இந்த காலத்து தாரகை. தன் காலில் எப்பொழுதும் தன்னால் நிற்கமுடியும் ங்கற தன்னம்பிக்கை கொண்டவள்.

தங்களுடைய பெண் இந்த வயசுலேயே நல்ல சம்பாதித்து தைரியமா இருப்பதை கண்டு மகிழ்ந்தாலும், காதல் கத்தரிக்காய் னு எதாவுது செஞ்சு தங்களை சங்கடதுகுள்ளகுவாளோனு பயம் அவளின் பெற்றோருக்கு ஒரு மூலையில் என்றும் உண்டு.

மூவரும் இரவு உணவு உண்ணும் நேரம் பார்த்து, மீனாவின் அன்னை , " என்னங்க, செய்தி தெரியுமா, நம்ம பரமசிவம் பொண்ணு இன்டர்நெட் ல யார்கூடவோ பேசி, பழகி லவ் பண்றாளாம். கல்யாணம் செஞ்சி வெயுங்க னு இப்போ அப்பா அம்மா கிட்ட ஒத்த கால்ல நிக்கிறாளாம். இவள பொண்ண பெத்ததுக்கு பாவம் இப்போ கஷ்டபடறாங்க அவங்க". இது மீனாவுக்கு மறைமுகமாக "அப்படி எதுவும் பண்ணிடாதடீ னு " அவங்க அம்மா சொல்வதை, மிக சரியாக புரிந்து கொண்டவள், " என்னம்மா தப்பு அப்படி பண்ணினா? வாழ்கை முழுவதும் நாம யார் கூட வாழனும் னு நாம முடிவு பண்றது எந்த விதத்துல தப்பு?. அவ பால் காரணயோ, பேப்பர் காரணயோ love பண்ணி வீட்டை விட்டு ஓடி போகலையே... அப்பா அம்மா விடம் சொல்லி, கல்யாண ஏற்பாடு தானே பண்ண சொல்ற... " என்று பதில் கூறினாள்.

இருவரும் தங்களின் எண்ணத்தை கூறிவிட்டோம் என்று நினைத்தாலும், அடுத்தவரின் எண்ணத்தை அறிந்த வருத்தத்தை உடனே முகத்தில் காட்டிவிட்டனர். தனக்கு பார்த்து பார்த்து செய்த அம்மாவை கஷ்டப்படுத்தி தான் இன்புறுவதை மீனா என்றும் விரும்பவில்லை. அதே போல், தன் ஒரே மகள் யாரயாவுது காதலிக்கிறாள் என்று தெரிந்து, அவள் மனம் நோகும்படி அதனை எதிர்த்து தன் பெயரை ஊராரிடம் காப்பாற்ற வேண்டும் என்று அவளின் அம்மாவும் விரும்பவில்லை. ஆனால் ஊரை நினைத்தால் ஒப்புகொள்ளவும் மனம் இல்லை.

சில மாதங்களுக்கு பிறகு...

"Hiii மீனா, எப்படி இருக்க?, காபி டே போகலாமா?" என்று தொலைபேசியில் கார்த்திக் கேட்டான். கார்த்திக் ஒரு software company இல் நல்ல பதவியில் இருப்பவன். இவர்கள் இருவரும் கபாலீஸ்வரர் கோயிலில் தான் முதல் முதலில் சந்தித்தனர்.

அன்று:

கார்த்திக்: "ஹாய் மீனா, நான் கார்த்திக். glad to meet u. போன வாரம் நீங்க மனோஜ்-மைதிலி கல்யாணத்துல பாடின பாட்டு ரொம்ப நல்ல இருந்தது. you have a very sweet voice and good carnatic sense. அப்போ தான் உங்க பேரு மீனா னு சொன்னாங்க. Its a pleasant surprise that we met here. நல்ல கலை நயம் இருக்ரவங்கள என்னால பாராட்டாம இருக்க முடியாது... அது தான் உங்க கிட்ட வந்து சொல்லிட்டேன். Dont mistake me.. "
மீனா: "oh thats fine. Thank you." என்று கூறி சிறு புன்னகையை பரிசளித்தாள்.
கார்த்திக்: "Just now something striked me. கேட்டா தப்பா எடுதுகமாடீன்களே... "
குழப்பத்துடன் மீனா: சொல்லுங்க..
கார்த்திக்: எங்க Rotaract club ல charity காக, ஒரு show நடத்துறோம். variety entertainment, mimicry, music, dance எல்லாமே இருக்கு. நீங்க அதுல karoke பாடின, ரொம்ப நல்ல இருக்கும் னு தோணுது. if u dont mind, can u also join in this celebration for a noble cause.
மீனா: ஐயோ, நான் அவ்ளோ பெரிய சிங்கர் எல்லாம் இல்லீங்க... சும்மா, கொஞ்சம் பாட்டு கத்துகுடேன்.. அத பாடிகிற்றுகேன்.. அவ்ளோ தான். show பண்ற அளவெல்லாம் பாட தெரியாதுங்க...
கார்த்திக்: உங்களால கண்டிப்பா முடியும். if u r interested, சொல்லுங்க.. நா ஏற்பாடு பண்றேன்.

show மிக அருமையாக நடந்து ஏகப்பட்ட வசூலை கண்டது.

மீனா விற்கு, தன் குரல் வளம் மீது பெரும் நம்பிக்கை வந்தது. இதற்க்கு முழு காரணம் கார்த்திக் என்பதை அவள் என்றும் மறக்கவில்லை. கார்த்திக்கின் பிறருக்கு உதவும் பண்பு, சகஜமாக பழகும் சுபாவம், spontaneous thinking, இவை அனைத்தும் அவன் மீது பெரும் மதிப்பு வர செய்தது. நட்பு, மதிப்பு அனைத்தும் மெல்ல மெல்ல அவளை அறியாமல் காதலை மாறியது.

கார்த்திக் இற்கும் மீனா வை மிகவும் பிடிக்கும். ஆண்கள் தான் முதலில் propose செய்ய வேண்டும் என்பது எழுதாத காதலின் விதி முறை. ஆனால், அது எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை, முடிவெடுப்பது என்னவோ பெண்கள் தான். அதாவுது, நான் இப்போ தயார், நீ propose செய்தால் ஒப்புக்கொள்ள என்று, மறைமுகமாக வெளிபடுதிவிடுவர். அவ்வாறே நடந்தது நம் கதையிலும்.

இவ்வாறு காதலிக்க துவங்கி, இன்று காபி டே வில் சந்தித்தனர் மீனாவும் கார்த்திக்கும்.

கல்யாண பேச்சை துவங்கினான் கார்த்திக். "எங்க வீட்ல காதல் னு சொன்னாலே பெரும் பிரச்சனை ஆய்டும். எப்படி அம்மா அப்பா வை கஷ்டபடுத்தாம, சமாளிக்க போறேன்னு தெரியல!.." என்று வருத்தத்துடன் சொன்னாள் மீனா. "எங்க அம்மா அப்பா ரொம்ப cool... ஆள choose பன்றதுக்கு முன்னமே, permission வாங்கிட்டேன்.." என்று பெருமையாக கூறினான் கார்த்திக். திடீரென்று மீனாவின் முகம் பிரகாசமடைந்தது... "ஒரு நல்ல யோசனை.. நாம ரெண்டு பெரும் ஒரே caste ங்கறதால, இத arranged marriage மாதிரி ஆகிட்ட என்ன??! " என்று உற்சாகத்துடன் கேட்டாள் மீனா. "என்ன ஒள்ள்ற??" என்றான் கார்த்திக்.

"நீ கவலையை விடு.. நான் பாத்துக்கறேன்.. சரி, எனக்கு இது சம்மந்தமா ஏகப்பட்ட வேலை இருக்கு... நா கெளம்பறேன் " என்று கூறிவிட்டு கிளம்பினாள்.

தனக்கு தோழன் போல் பழகும் தன் மாமாவிடம் சென்று, " மாமா, என் friend ஒருத்திக்கும் மாபிள்ளை பாக்றாங்க... அவளுக்கு இந்த பய்யன் ரொம்ப பிடிசுதாம்.. ஆனா மேட்ச் ஆகலையாம்.. நீங்க வேணாலும் பாருங்க னு குடுத்த.. நா போய் அம்மா கிட்ட குடுத்த, தப்ப எடுத்துக்குவாங்க.. நீங்க போய் குடுக்ரீங்கள... " என்று மிக பவ்யமாக கூறினாள். ஜாதகம் பொருந்துதா இல்லையானு முன்னமே இன்டர்நெட் ல பார்த்து வெச்சிட்ட. பொருந்தலைன, மாத்தி எழுதவும் தயாராக இருந்தாள். நல்ல வேளை, நன்றாகவே பொருந்தியது...

அவளின் பெற்றோருக்கும் கார்த்திக் கை மிகவும் பிடித்து விட்டது..
கார்த்திக் வீட்லயும் பேசி, கல்யாணம் முடிவு பணிடாங்க. மீனா வின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. கல்யாண ஏற்பாடுகள் பலமாக நடந்தது.

கல்யாண நாளும் வந்தது.

பெண்ணின் வீட்டார் எல்லாம் பேசிகொண்டிருந்தனர். "பரவாயில்லையே, உன் பொண்ணு, நீ கிழிச்ச கோட்ட தாண்டாம, நீ சொன்ன பய்யனையே கல்யாணம் பண்ணிகிரா.. ராசாத்தி. " என்று புகழ்ந்தனர்... மீனாவுக்கு மட்டும் தான் தெரியும், இது love cum arranged marriage nu.... மனதிற்குள் புன்னகைத்தாள். மீனாவின் அம்மாவும், மனதிற்குள் புன்னகைத்தாள். எனென்றால் அவர்களுக்கு தான் தெரியும், இது arranged cum love marriage னு.

அன்று இரவு சாப்பிடும்போது நடந்த உரையாடலின் பிறகு, மீனாவின் பெற்றோர்கள், அவளுக்கு தெரியாமல் தீவிரமாக மாபிள்ளை தேடி, கார்த்திக் ஐ தேர்ந்தெடுத்தார்கள். மீனாவின் taste நன்கு தெரிந்தவர்கள், அவளின் பெற்றோர்களாக தானே இருக்க முடியும். கார்த்திக் இற்கும் மீனா வை பிடித்துவிட்டது. பிறகு தான் இந்த கோயில் சந்திப்பு நடந்தது. "பெற்றோர் பார்க்கும் மாபிள்ளையும், love பண்ற மாதிரி தான் இருபாங்கப்பா" என்று மகிழ்ச்சியுடன் பெற்றோரை விட்டுகுடுகாமல் சொன்னாள் உண்மையை அறியாத மீனா.

Wednesday, August 13, 2008

Bravest in the world

Have you ever thought who is the bravest person in the world... I was jus thinking about it when I saw this person... man, he is very brave....

he is neither the Gold medalalist in the Boxing... nor in WWF....
any more guesses.. I can bet no one else....

guess maadi
..
..
..
..
..
All the people who r less than 3 months old, yes baba.. the new born babies.. they r the bravest...
though they have the least strength.. they r brave enuf to oppose us...
my little baby, on seeing us, though we r 20 times bigger than him, though our hands r like huge logs for him, he used to stop our hands with his tiny little hands when we come near him...... whenever the nurse hurt him with the vaccination, he used to defend her with his cute little hands and legs....

In my dictionary, One who doesnt think about the result and struggle to the fullest is the bravest. Because he is not worried about the result, he will bravely face the situation and I have seen that only in these cute sweety pies....

Sunday, July 13, 2008

Plants in my Balcony

Today we purchased 3 beautiful plants (there are no flowers now)... Plants in themselves r beautiful, aren't they?? it is very plesant to see them standing in my balcony... I am waiting to see the most beautiful part, the flowers in them.. watering those plants makes me feel as though I am feeding someone and it gives immense pleasure to watch them grow....

Nature has given many ways to feel good..... I feel this is one of them... Few others in my opinion

1. Watching the sea roar with plenty of milk in the form of foam when we go for an evening or an early morning walk in the seashore.

2. To listen the birds chirp all over our head in the evenings when we relax in a park.

3. A long drive with up hills and down hills in the roads...

4. Rowing a boat in a silent river..

5. Watching small kids playing...

6. water falls

The list goes on and on... and I am sure each one will have their own list which mite run to pages....
Whenever we feel tensed or feel as if we r out of mood, the best way to relax ourselves instead of showing it on others is to enjoy one of the nature gifts... These do not cost us anything, but gives us many pleasant things....

Thursday, May 8, 2008

இது ஒரு காதல் கதை

அருண் and அஞ்சலி - இவங்க தாங்க நம்ம கதையோட நாயகன் மற்றும் நாயகி. ஒரே காலேஜ் ல் படித்து வந்த இவர்களை, பழக வைத்தது என்னவோ அந்த Electronics lab தான். ஆனால் இவர்களின் காதல், இவர்கள் இருவருமே சேர்ந்து எடுத்த முடிவு தான். நம்ம கதாநாயகி அஞ்சலி, தீர்கமான முடிவு எடுபவள். நிறைவான பொருளை, குறைந்த வார்த்தைகளால் வெளிபடுதுபவள். "Love today" படத்துல சொல்வது போல, அழகு, அறிவு, அன்பு, அடக்கம் அனைத்தும் உடையவள்.
அருண் நிறைய பேசுவான். நன்கு படிப்பான். மிக புத்திசாலி. புதிசாலிகளுக்கே உரிய பிடிவாதம், தைரியம், கர்வம் அனைத்தும் நம்ம ஹீரோ வுக்கும் உண்டு.
ஒருவருக்கு ஒருவர் சொல்லாமலே இருவரும் புரிந்துகொண்டது தான் இவர்களது காதல். பெரியவங்க கிட்ட சொல்லும் நேரம் வந்துடுச்சு னு final year வந்ததும் realize செய்தனர் நமது ஜோடி. அஞ்சலியின் முடிவுகளின் மேல் அவளின் பெற்றோருக்கும் மிகுந்த மதிப்பு இருந்தது. ஆனால் நம்ம அருண் வீட்ல அப்படி இல்லீங்க. காதல்னாலே தடா. அதுலயும் வேற caste பெண்ணுக்கு என்னலாம் சொல்லியிருபாங்கனு உங்களுக்கே தெரியும். "அவங்களே அப்படி சொல்லும் போது நாம மட்டும் என்ன மட்டமா? நீயே யோச்சிக்கோ" என்று அஞ்சலியின் பெற்றோரும் ஒரு போடு போட்டனர். ஏகப்பட்ட பிரச்சனைக்கு பிறகு, முடிவு அஞ்சலியிடம். அருணின் வீட்டைவிட்டு அவனை மட்டும் அழைத்து செல்ல மனமில்லாமல் பிரிந்து விடலாம் என முடிவு எடுத்துவிட்டாள் அஞ்சலி. பெற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காண அவள் விழையவில்லை. இதில் சிறிதும் விருப்பமில்லாமல், தன் பெற்றோர்களையும் சமாதானப்படுத்த முடியாமல், அஞ்சலியையும் விட முடியாமல், குழம்பி போன நிலையில், தன்னால் முடிவெடுக்க முடியாது என்பதை உணர்தான். அஞ்சலியின் முடிவை தானும் ஏற்றுகொண்டான். சிறிது வருடங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல், ஆனால் எடுத்த முடிவில் சிறிதும் மாறாமல் அவர்களின் வாழ்வை சுவையின்றி, நாட்களை கழித்து வந்தனர். ஒவொரு நாளிலும், ஒரு முறையாவுது ஒருவரை ஒருவர் நினைக்காமல் இருந்ததில்லை.
காதல் மலர்ந்ததும் அருணின் கர்வம் அழிந்தது. காதல் பிரிந்ததும் அவனின் பிடிவாதம் ஒழிந்தது. ஒரு வார்த்தைக்கு மேல் அவன் இப்பொழுதெல்லாம் பேசுவதே கிடையாது. மொத்தத்தில் அவன் அவனாக சிறுதும் இல்லை.
ஒரு நாள் அஞ்சலிக்கு அருணிடமிருந்து ஒரு e-mail. தனக்கு திருமணம் என்றும், அஞ்சலி கண்டிப்பாக கல்யாணத்திற்கு வந்து வாழ்த்த வேண்டுமென்றும் எழுதியிருந்தான். மேலும், கல்லூரிக்கு பிறகு தன் வாழ்கையில் என்னென்ன துயரங்கள், மாற்றங்கள் நடந்தது என்றும், தன் would-be அபிராமியை எங்கு சந்தித்து, எவ்வாறு பழகினான் என்றும் சுருக்கமாக எழுதி இருந்தான். பின் குறிப்பாக "வாழ்வில் சிலதை மறப்பது கவலையை குறைக்கும் என்றால், அதை செய்வது தவறில்லை. நீயும் அதை அறிந்து நடப்பாய் என நம்புகிறேன்" என்று முடித்திருந்தான். கடிதத்தை படித்து மிகுந்த யோசனையில் ஆழ்ந்தாள் அஞ்சலி. இது நாள் வரையில் எதற்கு காத்திருந்தோம் என தெரியாமலே காத்திருந்த அஞ்சலி, தனக்கும் ஒரு துணை தேவை என்பதை உணர்ந்தாள். ஒரு முடிவும் எடுத்தாள். அவள் நேரே "இறைவன் இல்லம்" சென்றாள். ஒரு 3 மாத குழந்தையை தத்து பிள்ளை ஆக்கினாள். ஆம், ஒரு குழந்தை தான் அவள் நினைத்த துணை. அவன் தான் அர்ஜுன். சில வருடங்களுக்கு பிறகு, "அம்மா நா ஸ்கூலுக்கு போயிடு வரேன்" என்று அர்ஜுன் ஓட, அவனிடம் அருணிடம் கண்ட அதே பிடிவாதம், கர்வம், புத்திசாலித்தனம் கண்டு மகிழ்ந்தாள் அஞ்சலி. அர்ஜுனிடம் அவள் அருனைதான் தினம் தினம் பார்க்கிறாள்.
தனியாக வாழ்வது ஒரு ஆணுக்கு வேண்டுமென்றால் எளிதாய் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினம் என்பதை உணர்ந்துதான், அன்று அப்படி ஒரு இல்லாத கல்யாணத்திற்கு அழைத்திருக்கிறான் அருண். இப்படி சொன்னாலாவது அஞ்சலி ஒரு துணையை நாடுவாள் என நம்பினான். தன் வாழ்க்கையை இப்படியே "பொது சேவை" யில் ஈடுபட்டு கழித்துவிடலாம் என்று முடிவு எடுத்துவிட்டான். இப்பொழுது ஆதரவை நாடி தன்னிடம் வரும் அனைவருமே அவனுக்கு அஞ்சலி யை போல தான் தெரிகிறார்கள். அதிலேயே தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் அருண். இனி அருணையும் அஞ்சலியையும் யாராலும் பிரிக்க முடியாது என்ற மன நிம்மதியில் அருணும் அஞ்சலியும் தனி தனியே வாழ்ந்து வந்தனர்.