இது ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மனிதனின் கதை. மாணிக்கம் நம் கதையின் கதாநாயகன்.
மாணிக்கம் கொஞ்சம் முன்கோபக்காரன். இதனாலேயே எந்த ஒரு வேலையிலும் இரண்டு மாசத்துக்கு மேல் தாக்குபிடித்ததில்லை. மேல் அதிகாரியை கண்டபடி பேசிட்டான், கூட வேலை செய்ரவங்க கிட்ட மனஸ்தாபம், கீழ வேலை செய்றவங்க கிட்ட பல கட்டுபாடு என்று பல விதமான குற்றசாட்டு இவன் மீது. வேலை என்ன பிரமாதம், இவன் Interview வைத் தாக்குபிடிப்பதே பெரிய விஷயம். இப்போதெல்லாம் pressure interview னு வேற சில பேரு நம்ம பொறுமைய சோதிக்கிறாங்க.. இது தெரியாம மாணிக்கம் கத்திட்டு வந்துடுவான். இவன் ஒரு Disciplinarian, perfectionist அப்படி இப்படி எல்லாம் கிடையாது... சட்டுனு எதுக்கெடுத்தாலும் கோபம் வந்துடும், அவ்ளோதான். இப்போதெல்லாம் ரொம்ப பரவாயில்லைங்க. கொஞ்சம் control பண்ண ஆரம்சிருக்கான். ஆனாலும் மனசலளவுல பிறருக்கு தீங்கு பெருசா எதுவும் நினைக்காத சாதாரண மனுஷன்.
வேலை இல்லாத பட்டதாரிக்கு என்னவெல்லாம் மரியாதை கிடைக்குமோ அதை விட பல மடங்கு மாணிக்கத்தை கவனித்து கொண்டார்கள் அவன் வீட்டில். இதற்காகவே எப்படியாவது எதாவது ஒரு வேலையை தேடி பிடிக்கவேண்டும் என்ற கட்டாயதில் இருந்தான் மாணிக்கம். அவனின் ஒரே ஆறுதல் அவனின் நண்பர்கள். watchman வேலையிலிருந்து Clerk வேலை வரை வித விதமான வேலைகளில் இவர்கள் உதவியால் பல பல Interviews attend செய்து, சில சில வேலைகள் கிடைத்து, மிகச் சில சில மாதங்கள் பணியாற்றியிருக்கிறான் இவன்.
"டேய், நாளைக்கு அந்த primary school princi ய பாக்க போரயில?? " நண்பன் ஒருவன் மாணிக்கத்தை பார்த்து கேட்டான். "போகாம எப்படி? என் தல விதி.. போய்த்தான ஆகணும் .. அந்த ஆளு எப்படி?? " இது நீங்கள் நினைத்த படி, மாணிக்கம் தான்.
"உனக்கு நேர் மார். பொறுமையின் சிகரம். அதுவும் நீ போகப்போறது சின்ன புள்ளைங்க வகுப்புக்கு. கொஞ்சம் பவ்யமாவே பேசு. எப்படியோ வேலைய வாங்கிடு... அப்றோம் சின்ன புள்ளைங்க தான, மெரட்டி வெச்சிடு.. உன்னப் பாத்து பயபடுவாங்க... அபடியே ஓட்டிடலாம்.." என்றான் நண்பன்..
மறுநாள் Interview. போன இடத்தில், "குழந்தைங்க கிட்ட எப்படி நடந்துப்பீங்க ?" னு கேட்டதுக்கு, மாணிக்கம், பொறுமையாக இருப்பவன் போல் காண்பிக்க முயன்றான். மேலும் இவன் ஒரு வேலையிலும் தொடர்ந்து மூன்று மாதங்கள் கூட வேலை செய்ததில்லை. அனுபவம் மிக்க, பள்ளி முதல்வரை ஏமாற்றமுடியுமா என்ன? இந்த வேலையும் கிடைக்கவில்லை.
மாணிக்கம்:--- நான் ரொம்ப பொறுமையா "குழந்தைகள் எதையும் தெரிஞ்சு செய்யறதில்லை. நான்கு வார்த்தை திட்டி திருத்துவதை விட, அன்பாகச் சொல்லித்திருத்துவேன் " னு நீ சொல்லிக் கொடுத்தத தாண்ட சொன்னேன்... மத்த கேள்விகளுக்கும் அன்பு, பொறுமை, அரவணைப்பு னு நல்ல நல்ல வார்த்தைகளா தான்டா சொன்னேன்... வயசாயிட்டாலே , நம்ம மாதிரி பசங்களக் கண்டா நம்பிக்க வர்ரதில்லை இந்த பெருசுங்களுக்கு !!
நண்பன்:--- நீ சொல்ற விதத்துலேயே தெரிஞ்சிடும் டோய்!. சண்டைக்குப் போறவன் மாதிரி போய் சமாதனம் பேசி இருப்ப.. இதக்கூட கண்டுபிடிகாட்டி அவரு principal லா எப்படி இருக்க முடியும்... !!
அவனின் அப்பாவிடமிருந்து எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அர்ச்சனை. மாணிக்கத்திற்கு கல்யாண வயசுல அக்கா, காலேஜ் படிசிட்டிருகிற தம்பி, ஹப்பா னு நிம்மதியா வொக்காற வேண்டிய வயசுல, பத்து மயிலு cycle மிதிச்சு வீடு வீடா, கொடம் கொடமா தண்ணி கொண்டு குடுக்கிற அப்பா.. கேக்கணுமா!..
"எவ்ளோ தான் திட்டினாலும், பாவம் டா உங்க அப்பா.. இந்த வேகாத வெயில்ல, அவரு cycle ல போறதப் பாத்தா எனக்கே கண்ணுல தண்ணி வரும் ... அந்த வேலையாவது நீ செய்ய கூடாதா" அதே நண்பன்.
"கேட்டேன் டா எங்க அப்பாகிட்ட. அவரு மொதலாளி, என்ன நம்பி தரமாட்டாராம் இந்த வேலைய.. " இது மாணிக்கம்.
"உண்மையான காரணம் அது இல்லடா, தன் புள்ள தன்ன மாதிரி கஷ்டப்படகூடா துனு அவரு நினைக்கிறார். நீ படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேலைல உன்ன பாக்கனும்னு அவரு ஆசை படறார்... இவ்ளோ திட்டினாலாவது, உனக்கு ரோஷம் வருமான்னு பாக்கிறார். . அப்பவும் நீ அவர திரும்பி திட்ட தான் செய்ற.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு.. உனக்கே புரியும் " என்று நண்பன் அறிவுருத்தினான்.
இரவு முழுக்க மாணிக்கத்திற்கு தூக்கம் இல்லை.
என்ன தான் அவன் செய்வான்? , அவனையே அறியாம, கோவம், ஆத்தரம், எல்லாம் வந்து கத்திட்றான். இது ஒரு தப்பா? பயப்படறவன், அவன் பயத்தை போக்க நினைத்தால், விடா முயற்சி செய்து, தன் பயத்தை போக்கிடலாம். கோவம் வராதவனுக்கு கூட கோவம் வர வைத்துவிடலாம், ஆனால், பயப்படாதவனை பயப்பட வைப்பதும், கோவம் வருபவனைத் தடுப்பதும் ரொம்ப கஷ்டம்..
இரண்டு வாரமாய், யாரிடனும் சரியாக பேசவில்லை... தீவிரமாக வேலை கு application போட்டுகிட்ருந்தான். ஒரு supervisor வேலைக்கு ஆளு எடுப்பதா கேள்விப்பட்டு, அணுகினான். Supervisor ன, பெரிய படிப்பெல்லாம் படிசிருக்கவேண்டாமா என்ற சந்தேகம் அவனுள். அனால், தெளிவாக படிச்ச படிப்பு என்ன வென்றாலும் பரவைல்லைனு சொல்லிட்டாங்க. கீழ வேலை செய்றவங்க சரியாய் வேலை செய்றாங்களான்னு பார்த்தா போதுமாம்.
Interview விற்கு சென்றான். இந்த முறை மிகவும் நிதானமாக இருந்தான். அவசரப்படாமல், வீட்டு நிலையை மனதில் வைத்துக்கொண்டு, மிக பொறுமையாக பதில் கூறினான். இந்த முறை, அவனை உசுப்பேத்தி விடுவது போல் கேள்விகள் இருந்தன.. pressure interview என்பதை புரிந்துக்கொண்டு, அவனும் நிதானமாக, ஒரு சாதுவைப்போல் பதில் கூறினான். அவனுக்கே அவனை மிகவும் பிடித்தது. அவசரம், ஆத்திரத்தில் இல்லாத தெளிவை இப்பொழுது அவனால் உணர முடிந்தது....
Interview முடிந்து வந்தவன், நண்பர்களிடம் "கண்டிப்பா இந்த முறை, நான் ரொம்ப வேற மாதிரி இருந்தேன் டா... 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பது ரொம்ப சரி.... இன்னைக்கு தான் நான் முதல் முறைய புத்திசாலி மாதிரி பேசி இருக்கேன்" என்று தன்னை தானே மிகவும் புகழ்ந்தான்...
Interview முடிந்த இடத்தில், முதலாளியிடம், Interview வின் போது இருந்த மற்றொரு அதிகாரி "அந்த மாணிக்கம் எல்லா கேள்விகளுக்கும் நல்லா தானே பதில் சொன்னார் .. ஏன் அவனை வேண்டாம்னு சொல்றீங்க??" னு கேட்டார். அதற்க்கு முதலாளி, " ஆமாம் யா, அவன் நல்லாத்தான் பேசினான்... இருந்தும், இந்த வேலைக்கு கொஞ்சம் துணிச்சலும், கீழ வேலை செய்றவங்க இவன் மேல கொஞ்சம் பயமும் வெச்சிருந்தாத்தான், நமக்கு வேலை நடக்கும்.. அதுக்குத்தானே, பெரிய படிப்பெதுவும் வேண்டாம், சின்ன வயசு பசங்களா பார்த்து Interview கு கூப்பிட்டது. இவனுக்கு இருக்கிற பொறுமைக்கு இவன் சின்ன புள்ளைங்களுக்கு பாடம் எடுக்க தான் லாயக்கு" என்றார்.
வேலை கிடைக்காவிட்டாலும், மாணிக்கம் கற்ற பாடம், அவனுக்கு கட்டாயமாக கைக்கொடுக்கும்.