என் பெயர் சுந்தர்.
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை செஞ்சிற்றுந்தேன்.
கவனிக்கவும், "
செஞ்சிற்றுந்தேன்"..
இப்போ வேலை தேடிற்றுகேன்.
எங்க கம்பெனி ய திடீர்னு ஒரு நாள் மூடிட்டாங்க.
பெரிய படிப்பெல்லாம் படிச்சிருந்தா, வேற வேலை உடனே கெடச்சிருக்கும்..
நம்ம B.A.
படிப்புக்கு இந்த காலத்துல, peon
வேலை கூட யோசிச்சிட்டு தான் குடுப்பாங்க.
ஏதோ எங்க அப்பா மேல வெச்சிருந்த மரியாதைல,
பழைய company
ல supervisor
வேலை கெடச்சிது.
வாழ்கையும் நல்லா ஓடிற்றுந்துது.
எனக்கு கல்யாணமாகி 3 வருஷங்கள் ஆய்டுச்சு. போனதே தெரியலங்க. ஒவ்வொரு நாளும் அழகு, அன்பு, ரசனை, மிக்கதாகவே இருந்தது எங்கள் வாழ்கை. மன்னிக்கவும், "இருக்கிறது" எங்கள் வாழ்கை. ரெண்டு நாள்ல, அவளின் பிறந்தநாள் வருது. ஒவொரு தடவையும், அவளுக்கு mega surprise குடுக்காம நான் இருந்ததில்ல. ஒரு வாரத்துக்கு முன்னாடியே plan பண்ணிடுவேன். இந்த முறை வேலை தேடும் tension, pressure ல இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியல. நேரமே இருந்தாலும், மனம் வேலையை தவிர வேற எதையும் யோசிக்க மறுக்குது.
கல்யாணமாகி முதல் பிறந்தநாளுக்கு ஒரு மோதிரம் குடுத்தேன். அதையும் ஒரு அமைதியான நதியின், நடுவே ஒரு cruise boat இல் அனைவருக்கும் முன்னமே அறிவித்துவிட்டு, அனைவரும் சேர்ந்து birthday பாடல் பாடி, cake வெட்டி celebrate பண்ணினோம்.. பெருசா பிரமாண்டமா எதுவும் செய்யனாலும், சின்ன எதிர்பார்ப்பு கூட இல்லாத அவளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை குடுத்தது. அது எனக்கு மிகவும் பிடித்தது.. இன்றும் அவள் காலையில் எழுந்தவுடன் அந்த மோதிரத்திற்கு முத்தமிட்டுத்தான் அவளின் நாளை தொடங்கிவைப்பாள். மிகவும் ராசியான தாம், அந்த மோதிரம். அடுத்த பிறந்தநாளுக்கு எதிர்பார்ப்பு கொஞ்சம் இருந்தது. ஆனால், நான் வேலை காரணமாக, வேற ஊருக்கு போக வேண்டி இருந்தது. வந்த பிறகு celebrate பண்ணலாம்னு சொல்லிட்டு கிளம்பி போயிருந்தேன். actually என் வேலை முன்னமே முடிஞ்சிடும். அவளுக்கு surprise குடுப்பதற்காக அப்படி சொல்லி இருந்தேன். என் friend family ய முன்தினம் வீட்டுக்கு வரசொல்லிருந்தேன். correct aa midnight க்கு நானும் வந்துட்டேன். எல்லாரும் சேர்ந்து celebrate பண்ணோம். என்னுடைய பரிசு அவளுக்கு மிகவும் பிடித்த வைரமுத்துவின் கவிதைகள் புத்தகம். எவ்வளவு முறை படித்தாலும், புதிதாக படிப்பதுபோல் அனுபவித்து படிப்பது மட்டும் இல்லாமல், எனக்கு ஒவ்வொருமுறையும் அதன் அழகினை அழகாக வர்ணிப்பாள். இரண்டு பிறந்தநாளுக்கும், அவளின் ஆனந்த கண்ணீரையே எனக்கு பரிசாக குடுத்தாள்.
இந்த முறை என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அவளுக்கு மட்டும் என்ன,
அவளின் பிறந்த நாள் வருவது கூட மறந்திருக்கும். 24
மணி நேரமும் உழசிற்றுக்கா.
வீட்டுக்கு வேலைக்கு வரும் லக்ஷ்மி அக்காவை வரவேண்டாம் னு சொல்லிட்டா.
எங்கள் சேமிப்பு குறையாமல் இருக்க,
அவள் சின்ன வயசுல,
கொஞ்சம் பழகின தையல் தொழிலை வைத்து,
பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, chudidhar, blowse, frock,
பசங்களுக்கு pant, shirt
முதலிவை குறைந்த கூலிக்கு தைத்து குடுத்து வீட்டு செலவுகளை சமாளிக்கிறாள்.
வீண் செலவு எதுவும் செய்யகூடாது என்பது எனக்கு விதித்த கட்டளை.
எனக்கும்,
எது வாங்கி கொடுக்கவும்,
மனசில்லை.
கைல வேலை இல்லாம,
இந்த பந்தா எல்லாம் தேவையான்னு,
எனக்குள்ளேயே ஒரு குற்ற உணர்ச்சி.
ஆனால்,
அவளின் ஆனந்த கண்ணீரை எப்படியாவுது வென்றுவிடவேண்டும் னு ரொம்ப ஆசையா இருந்தது.
ஒரு நாள் கழிந்துவிட்டது.
நான்கு கம்பெனி ஏறி இறங்கிருகேன்.
எல்லாருமே,
அடுத்த வாரம் தெரிவிக்கிறோம் னு சொல்லிருகாங்க.
நான்கு interview
ல,
ஒண்ணு மட்டும் தான் கொஞ்சம் திருப்தியா செஞ்சேன்.
அதுவும் முழு திருப்தி இல்ல.
பாப்போம்.
இன்னிக்கி evening, beach க்காவுது போயிட்டு வரலாம் னு கூப்பிட்டேன். அவளும் "வாவ், நல்ல ஐடியா ங்க. jolly ஆ, குளு குளு காத்துல, தண்ணீல நல்ல நெனஞ்சிட்டு சுட சுட மொளக பஜ்ஜி சாப்ட்டுட்டு வரலாம். ரொம்ப நல்லா இருக்கும்... நாளைக்கு அந்த PSN and Co, interview, மூணு மணிக்குதானே,.. அதுவும் ஆதம்பாகத்துல... அத முடிச்சிட்டு நீங்க bus பிடிச்சிட்டு வீட்டுக்கு வரவே மணி ஏழு ஆய்டும். நாம இன்னிக்கே என் பிறந்த நாளை கொண்டாடிடலாங்க னு மிகுந்த ஆர்வத்தோடு சொன்னாள். மேலும், சிறிது குரலை குறைத்துக்கொண்டு, "வேற எதுவும் வேண்டாங்க. இன்னும் ஒரு வாரத்துல, வேலை கிடைச்சிடும், ஒரு மாசத்துல, சம்பளம் வந்த பிறகு, எனக்கு எதாவுது வாங்கி கொடுங்க.. சாதரண பொடவ எல்லாம் குடுத்த வாங்கிக்க மாட்டேன். பட்டு பொடவ வேணும், அதுவும் double side border la." என சிரிச்சுகிட்டே, "நான் போய் ready ஆய்ட்டு வரேன்" னு கெளம்பிட்ட.
பீச் ல நிறைய பேசினோம். இந்த மூன்று வருட வாழ்கையை அசை போட்டுகுட்டோம். அவளின் சின்ன வயசு பேச்சை தொடங்கிட்ட, நிறுத்தவே மாட்டாள். நூறாவுது முறையாக கூறும் விஷயமாக இருந்தாலும், "அப்படியா" னு ஆச்சரியப்படுவதைப் போல் செய்து அவள் பேசும் அழகினை ரசித்து கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியல... கொஞ்சம் தண்ணி ல விளையாடிட்டு, கார சாரமா பஜ்ஜி சாப்டுட்டு வீட்டுக்கு வர மணி ஒன்பது ஆய்டுச்சு. அவள், தோசை வார்த்து குடுக்கும் போது தான், அவள் விரலில் மோதிரம் இல்லாததை பார்த்தேன். "ஏன் மா, ராசி இல்லன்னு அந்த மோதிரத்த கழட்டிடியா" னு கேட்டேன். தன் விரலை பார்த்து பதரியவளாய், தன் சேலையை நன்கு உதறினாள். "சாயந்தரம் காபி போடும் போது கூட கைல இருந்துதுங்க.. எங்க போயிருக்கும்?? " னு கண்ணில் கண்ணீர் எட்டி பார்க்க சமையலறையில் தன் கண்களை மேய விட்டாள். "பீச் ல விழுந்த்ருசோ!!" எட்டி பார்த்த கண்ணீர் பொல பொல என வழிந்துவிட்டது.
"இப்போ என்னங்க பண்றது? எனக்கு மிகவும் ராசியான மோதிரம். அது இல்லாம என்னால இருக்கவே முடியாது.. plz போய் தேடிப்பாருங்க.." என்று சொன்னாள். "என்ன விளையாடறியா, மணி இப்போ ஒன்பது. பட்ட பகல்லயே பீச் ல தொலஞ்ச ஒன்னு கிடைக்க வாய்ப்பில்ல, இந்த ராத்ரி நேரத்துல போய் தேடசொல்ற... சரி சரி, கவலைபடாத, நாளைக்கு மூணு மணிக்கு தான interview. நான் காலைல போய் தேடி பாக்றேன்.. " என்று வந்த கோவத்தை அடக்கி கொண்டு ஆறுதலாய் சொன்னேன். "வேண்டாங்க, நீங்க interview க்கு தயாராகுங்க.. நான் போய் பாக்றேன். அது கண்டிப்பா என் கைக்கு வரும் னு எனக்கு நம்பிக்கை இருக்குங்க. நாளைக்கு அது இல்லாம நான் வரமாட்டேன்" னு வீராவேசமாக சபதமிட்டாள். "already அதிர்ஷ்டம் இப்போ தான் நம்ம ஊரு local bus ஏறி நம்ம வீட்டுக்கு வர ticket எடுக்கலாமா வேண்டாமா னு யோச்சிற்றுக்கு... இதுல நீ luck னு நம்பர மோதிரம் வேற தொலஞ்சு போச்சா.. நாளைக்கு interview நா நல்ல செஞ்ச மாதிரி தான்.. " னு வ்ரக்தியோடு சொன்னேன்.. அவளுக்கு கஷ்டமாய் போய்விட்டது.. இரவு முழுக்க இருவருக்கும் தூக்கம் இல்லை.
பன்னிரன்டு மணிக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் கூறிவிட்டேன். எப்போ தூங்கினோம்னு தெரியல. எழுந்த்ருக்கச்சே மணி ஆறு.. அவள் இன்னும் அசதியில் தூங்கிகொண்டிருந்தாள். அரை மணி நேரத்தில் கிளம்பி, வர மதியம் ஆகும் னு எழுப்பி, சொல்லி அவள் கேள்விக்கு இடம் குடுக்காமல் கிளம்பிட்டேன். நான்கு மணி நேரத்தில் திரும்பி வந்தவன், மறுபடியும் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்தை கூறிவிட்டு, எப்பொழுதோ வாங்கிய புதுச் சேலையை கட்டி இருந்த அழகைப் பாராட்டி விட்டு, interview க்கு தயாராகத் தொடங்கினேன். காலையிலிருந்து அவள் முகம் வாடியே இருந்தது. சாதரன நாட்கள்ல கூட அதிர்ஷடத்த நம்பாதவன், துன்பம் வரும்போது நம்ப ஆரம்சிடுவான். அவள் முன்னமே மிகுந்த நம்பிக்கை உடையவள். இப்போ கேட்கணுமா!!. "மோதிரம் கிடைத்ததா" னு கேட்க பல முறை வாய் திறந்தவள், என் பார்வைப் பட்டதும் மௌனமானாள்.
"அது எப்படி கிடைக்கும் னு நீ நம்பர, பீச் மணல்ல விழுந்துதோ, இல்லேன்னா, தண்ணி ல விழுந்துதோ, நானும் முடிஞ்ச வரைக்கும் பார்த்தேன்.. கிடைக்கல மா.. பரவாயில்லை, நீ அத மறந்துடு" னு சொன்னேன்... அழுதுகொண்டே அவள் சென்றுவிட்டாள். இருவரும் சாப்பிட்டோம். பாயசம் ஏனோ அன்று இருவருக்கும் இனிக்கவே இல்லை. அப்றோம், ரெண்டு பேரும் சும்மா பேசிற்றுந்தப்போ, "Very Happy Birthday" னு சொல்லி சிறிய gift wrapped பெட்டியைக் குடுத்தேன். அவள் மிகுந்த ஆர்வத்தோடு அதை பிரிக்க ஆரம்பித்தாள். "எதுவும் வேண்டாம், அப்படி இப்படி னு dialogue விட்ட, இப்போ இப்படி ஆசையா திறந்து பாக்குற!" னு சொன்னேன்... "என் lucky மோதிரம் மா, இருக்கணும் கடவுளே!" என்று வேண்டிக்கொண்டே அதை திறந்தாள். எப்படி தான் பீச் ல கிடைக்கும் னு நம்பினாளோ தெரியல... அவள், கைகளில் அந்த மோதிரம் இன்னுமே அழகாக ஜொலித்தது. என் பரிசு எனக்கு கிடைச்சிடுச்சு.. அவளின் ஆனந்த கண்ணீர். அதனை, கைகளில் தாங்கினேன்..
"Thank you soooo much.. எனக்காக பீச் முழுக்க தேடி கண்டுபிடிசிர்கீங்க... ஆசை இருந்துதே தவிர, மோதிரம் கிடைச்சிடும் னு நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லீங்க.. நீங்க நம்பிக்கை வெச்சி, போய், தேடி.. chanceee இல்ல.. கொண்டு வந்துடீங்க... இது தாங்க நீங்க இது வரை குடுத்ததுல, best gift..".. என்னால நம்பவே முடியல னு நூறு தடவ சொல்லிட்டா.. கண்களில் இன்னும் கண்ணீர் வந்துகொண்டு தான் இருந்தது... தொலைஞ்சி போனப்போ வந்த கண்ணீரை விட கிடைச்சப்றோம் வந்த கண்ணீர் தான் அதிகம்.. இதற்க்கு தானே நானும் ஆசைப்பட்டேன்..
அதனால் தான், முன்தினம் பீச் க்கு அழைத்து சென்று, அவளின் மோதிரத்தை, அவளுக்கே தெரியாமல் நான் எடுத்து விட்டேன். அவளின் அதிர்ச்த்டம் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் அவளும், அவளின் மகிழ்ச்சி, ஆனந்த கண்ணீர் கிடைத்த அதிர்ஷ்டம் என்னுடனும் இருக்க, இதுவே எனது இறுதி interview வாக இருக்கும் என ஒரு புது நம்பிக்கை மலர்ந்தது. அந்த நம்பிக்கையுடன் ஆதம்பாகத்திற்கு புறப்பட்டேன்.