Me and My Pen

Thursday, November 20, 2008

வாழ்க வளமுடன்

என் பேர் தீபா. அனுவும் நானும் ஒரே பள்ளியில் படித்து வந்தோம். அனு மிக நன்றாக படிக்கும் பெண். வகுப்பில் எப்பொழுதுமே முதல் மதிப்பெண் வாங்குபவள். நா ஒண்ணும் கொர்ரச்சல் இல்லீங்க.. இரண்டவுது மூன்றாவுது அதிகபட்சமா ஐந்தாவதுகுள்ள வந்துடுவேன். ஆனாலும் ஒத்துக்கவேண்டிய விஷயம், அவளின் புத்திசாலித்தனம், IQ , தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துக்கு முன்னாடி, நானெல்லாம் ஒண்ணுமில்லீங்க...


இப்போ நாங்க வாழ்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கோம். பிள்ளைகளை விட பெற்றவர்கள் அதிகம் tension ஆகும் வருடம். பெற்றவர்களுக்கு அதிகம் home work இருக்கும் வருடம். பனிரெண்டாம் வகுப்பு. எப்படாப்பா பரீட்சை வரும், ஒன்றரை வருஷமா படிச்சத எல்லாம் பரீட்சை பேப்பர்ல கொட்டிட்டு வந்திடலாம் னு நாங்கெல்லாம் காத்திருந்தோம்.


ஒரு வழியா முப்பது நாட்கள்ல எல்லாம் பேப்பர் உம் முடிஞ்சிது. சரி, ஒரு தலை வலி முடிஞ்சிது னு பெருமூச்சு விட்ரதுகுள்ள, அடுத்து இடி போல வர போற நுழைவுத் தேர்வுக்கு படிக்கணும். ஒரு நாள் கொஞ்சம் relax பணிகலாம்னு, marina beach போகலாம்னு நாங்க friends கொஞ்சம் பேரு decide பண்ணினோம்.


அன்று தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது... எங்கள் bus உம் எதிரே வந்த bus உம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவிருக்கும் தருவாயில், அதிர்ச்சியில் அனைவரும் திக்குமுக்காடினோம்... நான் நினைவிழந்து விட்டேன். கண் விழித்து பார்க்கும் பொழுது, என் தாயாரின் அழுகை கேட்க, என் தந்தையின் சோர்ந்த முகம் தெரிய, என் அண்ணனின் கை என் கைகளை பிடிக்க, அம்மா என்று நான் அலற, என் அத்தனை புலன்களும் வேலை செய்வதை உணர்ந்து அவ்வளவு துக்கத்திலும் ஒரு புன்னகை வர தான் செய்தது..


என் கைகளிலும், முகத்திலும், நிறைய கண்ணாடி துண்டுகளின் காயம், இடது காலில் fracture , அகங்கே நிறைய இடங்களில் stitches என்று அம்மா அழுதுகொண்டே கூறினாள். சரி hospital லில் இருந்தே நுழைவுத் தேர்வுக்கு படிக்க வேண்டியது தான் என்று நினைத்துகொண்டேன்... சரி, அனு, மீனா, பவித்ரா, வேணி எல்லாரும் எப்படி இருகாங்க??? எல்லாருக்கும் உன்ன மாதிரி கொஞ்சம் கொஞ்சம் காயம்.. ஆனா, நம்ம அனுவுக்கு தான்.. என்று இழுத்தாள் அம்மா...
"என்னம்மா ஆச்சு?? சீக்கரம் சொல்லு?? எனக்கு பயமா இருக்கு" என பதறினேன்... என் வாழ்க்கையில் நான் மிகவும் துடிதுடித்த தருணம் அது. "அவளின் வலது காலை cut பண்ணி எடுத்து, artificial leg பொறுத்த போறாங்களாம் " என்று மெதுவாய் சொன்னாள்.

"என்ன கொடுமை இது??, இறைவன் மீது எனக்கு மிகுந்த கோபம் வந்தது... ஒன்றுமே புரியாதது போல் இருந்தது. இதெல்லாம் ஒரு கனவாக இருக்க கூடாதா! நாளைக்கு மறுபடியும் எங்களின் இறுதி பரீட்சை இருக்க கூடாதா!" என்று என் மனம் மிகவும் விரும்பியது... என்னால் அனுவை எதிர் கொள்ளவே முடியவில்லை. ஒரு வாரம் இப்படியே போனது... அனு வீட்டுக்கு வர, இன்னும் இரண்டு வாரம் ஆகும் என்று அவளின் தாயார் சொன்னார். இது நாள் வரையில், அவளின் தாயாரிடம் மட்டும் தினமும், அனு எப்படி இருக்கிறாள் என்று கேட்டு கொள்வேன். தினமும் அழுதுகிட்டே இருக்கிறாள் என்றும், ரொம்ப பயமா இருக்கு எதாவுது செய்துகுவாளோ என்றும் கவலை பட்டார்.. மனம் சிறிதும் புத்தகத்தின் பக்கம் வரவில்லை. அன்று அனுவை பார்க்க தைரியத்தை வரவழைத்து கொண்டு அவளின் அறைக்குச் சென்றேன். அழுது அழுது கண்கள் இரண்டும் வீங்கி இருந்தது... எனக்கு அடுத்த நொடி அழுகை வந்து விட்டது..


"நானும் இப்படி தான் அழுதுற்றுந்தேன் 1 week ஆ. இனிக்கி morning தான் "இனி அழக்கூடாது னு decide பணிருக்கேன்" என்று அழுதுகொண்டே சொன்னாள். "நமக்கு ரொம்ப பிடிச்சவங்க ள நாம எழந்துட்ட, அந்த துக்கத்த நம்மால தாங்கவே முடியாது.. ஆனா, நாம அத மறந்து நம்ம வாழ்கையை தொடரத்தான் வேணும்.. அதுபோல், எனக்கு உறுதுணையா இருந்த என் காலின் இழப்பை, நான் ஏத்துக்கொண்டு, என் வாழ்கையை தொடரத்தான் வேண்டும்.. வேற வழியே இல்லன்னு இருக்ரப்போ, அத நெனச்சு வருத்தபட்ரதால எந்த பயனும் இல்ல. இனி என்னுடைய artificial leg நான் நடக்க உறுதுணைய இருக்கும். இத சொல்றது ரொம்ப சுலபம்.. வாழறது கஷ்டம்.. பாப்போம்.. சரி, நான் என் அப்பா கிட்ட physics book எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன்.. இன்னும் 3 weeks தான் இருக்கு... படிக்க ஆரம்பிக்கணும்.. நீ எந்த chapter படிக்க ஆரம்சிருக்க? " என்று அழகாக பேச்சை மாற்றினாள்... நானும், அன்று படிப்பைப் பற்றிய பேச்சை தொடர்ந்துவிட்டேன்..

இவ்ளோ நடந்திருந்தும், தேர்வில் அவள் தன் முதல் மதிப்பெண். என்னால் அந்த ஒரு மாதம் ஒன்றுமே படிக்க முடியல... வெளியூரில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தாலும், அனுவின் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி அவளை எங்க ஊரு கல்லூரியிலேயே சேர்த்தார்கள். என் entrance marks கொஞ்சம் கொரஞ்சதால, நானும் எங்க ஊரு காலேஜ் ல தான் சேர்ந்தேன்... அனு என்னை பலமுறை பிரமிக்கவைதிருக்கிறாள். ஆனால் , எனக்குள் ஒன்று, அவளின் மகிழ்ச்சிக்காக என்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்துக்கொண்டிருந்தது..

ஒரு முறை, PT hour ல, எல்லாரும் Volley Ball விளையாடிற்றுந்தாங்க.. அனு ஒரு மரத்தடியில் அமர்ந்து பாத்துகிற்றுந்தா.. நா கொஞ்சம் லேட் ஆ வந்தேன்.. "சரி, வா அனு, நாம அந்த பக்கம் போகலாம்" னு அவளை திசை திருப்ப பார்த்தேன்.. "ஏன், எனக்கு கஷ்டமா இருக்கும் னு நினைகிரியா? கண்டிப்பா இல்ல.. என் கால்கள் நல்ல இருந்த்ருந்தா கூட நான் ரொம்ப நேரம் இதெல்லாம் விளையாடிருக்க மாட்டேன். இப்படி வேடிக்கை தான் பாத்துகிற்றுந்த்ருபேன். இப்போ மட்டும் ஏன் எல்லோரும் என்ன பாவமா பாக்றீங்க?... அபடியே எனக்கு எதாவுது விளையாடனும் னு தோநிசுன்ன, நா Chess இல்ல carrom விளையாடறேன்.. நீ ரொம்ப feel பண்ணாத னு" சிரிச்சுகிட்டே சொன்ன.."ஒரு வேளை நான் dancer ஆ இருந்து, என் கால்களை இழந்திருந்தால், mabe அப்போ ரொம்ப கஷ்டபற்றுப்பென இருக்கும்..." என்றும் சொன்னாள். ஆனா, அவள் கண்டிப்பா அப்பவும் feel பண்ணிருக்க மாட்டாள். "இவ்ளோ நாள், என் கால்கள் இருந்துது.. dance ஆடினேன்.. இப்போ வேற எதாவுது கத்துக்ரேனே!" என்று சொல்லி இருப்பாள்.


எங்கள் படிப்பு முடிந்ததும், இருவரும் வேலைக்குச் சேர்ந்தோம்.. படிப்பிலும் சரி, வேலைக்கு தேடும்போதும் சரி, எந்த வித quota வும் பயன் படுத்த கூடாது என்பது அவளின் முடிவு... எவ்வளவு தான் அவள் அவளின் ஊனத்தை மறக்க முயன்றாலும், இந்த ஊர் அவளை பாவம், பரிதாபம் போன்ற உணர்ச்சிகளால் ஞாபகம் படுத்திக்கொண்டே இருந்தது,... இது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது... எப்படியாவுது அவளுக்கு வெகு தொலைவான ஒரு தனி உலகத்துக்கு transfer ஆகணனும் னு நா வேண்டிகாத கடவுள் இல்ல.. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.. ஒரு consultant மூலமாக America வில் வேலை செய்ய விசா ஏற்பாடு செய்யும் நபரின் அறிமுகம் கிடைத்தது... அனு வை எப்படியாவது சமாளித்து apply பண்ண வைத்தேன்,... கண்டிப்பா கெடச்சிடும்.. இந்த மாற்றம் அவளுக்கு சுதந்திரத்தையும், மன சாந்தியையும் தரும்..


என்னடா நான், அனுவைப் பத்தி இவ்ளோ கவலை படறேன்னு பாக்ரீங்கள.. இது அவளிடம் எனக்கு இருந்த நட்புக்காக மட்டும் இல்ல... infact, அந்த நாளிலிருந்து தான், எங்கள் நட்பு வலுவானது. இது ஒரு குற்ற உணர்ச்சியினால் தான்... அன்னிக்கி நானும் மீனாவும் beach கு போக plan செஞ்சப்போ, அனு கண்டிப்பா வர மாட்டேன்னு சொன்ன... "ஒரு நாள் தான, எங்களோட வந்தா, ஒன்னும் கொரஞ்சிடாது, உனக்கு ஒண்ணும் ஆகாம, பத்ரமா வந்து சேதுடறேன்னு வலு கட்டாயப்படுத்தி அவள கூட்டிட்டு போனேன்... நாங்க எல்லாம் டைம் வேஸ்ட் பண்ணும் போது, அவ மட்டும் படிசிடகூடாதுங்க்ற பொறாமைல தான் force பண்ணேன்.. அப்படி நான் செய்யாமல் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடக்காமல் இருந்த்ருக்கும்.. இப்படி அவளுக்கு ஆனதுக்கு ஒரு வகையில நானும் காரணம்ங்கற குற்ற உணர்ச்சி... அதற்க்கு மேல், இதுவரை, அப்படி ஒரு முறை கூட அவள் சொல்லிக் காட்டியதில்லை... அதுவே என் மனப் போராட்டத்தை இன்னும் அதிகரித்தது...

என்னுடைய அந்த சின்ன புத்தியின் விளைவாய், நேரடியாக அந்த நிகழ்வுக்கு நான் காரணம் இல்லை என்றாலும், ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போதும், முள் மீது நடப்பது போல் துடி துடித்து போகிறேன்.. அவள் எப்பொழுதும் நிதானமாகத்தான் இருக்கிறாள். "கெட்டாலும் மேண் மக்கள் மேண் மக்களே" அதுதான் அனு. அவளை நன்கு புரிந்துகொண்டவரும், அவளுக்கு மிகவும் பிடித்தவருமான ஒருவர் அவளை மணம் புரிய மனமார வாழ்த்துகிறேன்.

Monday, November 3, 2008

அவள் அப்படித்தான்

ஒரு நிறுவனத்தில் கணிபொறி பிரிவில் பணியாற்றி வந்தனர் மூவர் . வித்யா, சீதா, மற்றும் அர்ச்சனா. இதில் அர்ச்சனா, மிக அமைதியான பெண். மற்ற இருவரும் நன்கு அரட்டை அடிக்கும் ஆசாமிகள். இவர்கள் இங்கு சேர்ந்த பிறகே அறிமுகமானவர்கள். இவர்களின் வேலை நேரம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து வரை .

வித்யா மற்றும் சீதா கல்லூரி விடுதியிலிருந்து படித்தவர்கள். மிக சகஜமாக அனைவரிடமும் பழகுவார்கள். அர்ச்சனா, வீட்டு கோழி. என்றுமே பெற்றோரின் நிழலிலேயே பொத்தி பொத்தி வளர்ந்தவள். தினமும் தன் வேலையை முடித்து அரசு அலுவலகம் போல், சரியாக, ஐந்து மணி ஆனவுடன் கிளம்பிவிடுவாள். ஆனால், மற்ற இருவரும் , மணிக்கு ஒரு முறை Tea-break , ஒரு மணி நேரம் Lunch-Break என்று கல்லூரி போல் ஜாலியாக பணி புரிய விரும்புவார்கள்.

இவர்கள் இருவரும் மெயில் செக் செய்வது, blogs படிப்பது, chat செய்வது, செய்தி தாள் வாசிப்பது, games விளையாடுவது என்று ஒரு கணினி கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்வர். பின்பு அதை பற்றி break களில் discussions . எட்டு மணிக்கு கம்மியா இருவரும் அலுவலகத்தை விட்டு கிளம்பினதா, சரித்திரமே இல்ல. இவர்களின் வேலையில் எந்த வித குறையும் இல்லாததால், மேனேஜர் இடம் இவர்கள் மூவருக்கும் நல்ல பெயர் தான்.

வேலை பொழுது போக்கு போல் செய்தால், சுகமாக இருக்கும் என்று எப்பொழுதும் அர்ச்சனா வை சீண்டுவார். அந்த வாதத்தை வளர்த்தால், எங்கு நேரம் போய்விடுமோ என்று அஞ்சி அவள் வாக்கு வாதத்தை வளர்க்க விரும்பவில்லை.

வித்யா மற்றும் சீதா browse செய்யும் technical sites வேறுபட்டிருந்தாலும்,
இவர்கள் இருவரின் favourite blog "பெண்ணுக்குள் ஓர் உலகம்". மது என்பவளால் எழுதப்படுவது.

"வீடு, வேலை, சாப்பாடு, தூக்கம், தொலைக்காட்சி னு இல்லாம, எதாவுது hobby இருக்கவேண்டாமா, then only you will know about many things. " என்று, இவர்கள் இருவரும் அர்ச்சனா விற்கு நிறைய முறை advice செய்திருக்கிறார்கள். "மதுவின் blog யவுது படி... நல்ல கதைகள், கவிதைகள், னு அசத்தலா எழுதி இருக்கா. எவ்ளோ followers தெரியுமா அவளோட blog க்கு?. அவ்ளோ நல்ல இருக்குன்னு அர்த்தம். சும்மா ஒரு முறை படிச்சு பாரு.. பிடிகலன்ன, free விட்டுடு... அது தவிர, இன்னும் எவ்ளவோ பண்ண முடியும் free time ல. சரியான நேரத்துல வீட்டுக்கு போய், அம்மா கு சமையல் ல உதவி செஞ்சு, தம்பி க்கு படிப்பு சொல்லிகுடுக்றது மட்டும் இல்ல வாழ்கை. நீயா நெறைய கத்துக்கணும் எங்கள போல!" னு ஒரு நாள் பயங்கர advice. என்ன சொல்லி என்ன, எப்பவுமே அர்ச்சனா வின் பதில் ஒரு புன்னகை மட்டும் தான்.

அன்று, வீட்டுக்கு வந்தவுடன், வித்யா, சீதா சொன்னது ஞாபகத்திற்கு வந்தவளாய், முதல் வேலையாக மதுவின் blog இற்கு சென்றாள். archana.ramkumar@gmail.com user ID வைத்து login செய்தாள். நம்ம அர்ச்சனா தான், மது என்ற புனை பெயரில், "பெண்ணுக்குள் ஓர் உலகம்" என்கிற வலைபதிப்பை எழுதுபவள்.

அர்ச்சனா வின் தாயார், "என்னம்மா, இன்னிக்கு வந்தவுடன், கம்ப்யூட்டர் முன்னாடி??" அர்ச்சனா அதற்க்கு "திவ்யா வும் சீதாவும் இன்னிக்கி வாழ்க்கையில் எதாவுது செய்யணும் னு ரொம்ப அட்வைஸ் பண்ணினாங்க. அதை வெச்சி ஒரு கதை தோணித்து. அது தான் உடனே எழுதிடலாம்னு வந்தேன்."

தாயார்: "நீ தான் அந்த blog எழுதறேன்னு சொல்லலாம்ல அவங்க கிட்ட?"

அர்ச்சனா : "வேண்டாம் மா. அப்றோம் அவங்க கேள்விகள், discussions எல்லாத்துல நானும் பங்கேற்க வேண்டி இருக்கும். அப்றோம் எழுதறது கொறஞ்சி அதை பத்திய பேச்சு அதிகமாகிவிடும். அது மட்டும் இல்லாமல், இப்படி எழுதினால், அவங்க நம்ள பத்தி என்ன நினைப்பாங்களோ, அப்படி எழுதினால், நானும் அப்படி தான்னு நினைபான்களோ, அப்படி பட்ட எண்ணங்கள் என் எழுத்து சுதந்திரத்தையே பரிச்சிடும். I have to write for others, if it is my profession. But writing is my hobby and I want to write it for me. நா எழுதறேன்னு சொல்லாமலே, விமர்சனங்கள் கேடசிடுது. இது போதுமே எனக்கு. அதுக்கு தான், என் நெருங்கிய நண்பர்களிடம், நான் படிச்சது னு சொல்லி என் blog post a நானே forward பண்ணினேன். இப்போ அதைபத்தி என் கூட வேலை செய்றவங்க எனக்கே சொல்றாங்க.

தாயார்: எல்லாத்துக்கும் எதாவுது பதில் வெச்சிருபியே!.

என்று தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்.