Me and My Pen

Wednesday, October 15, 2008

Richness

Richness doesnot depend on what u earn, but on how u spend.

Sunday, October 12, 2008

கடவுளே இது என்ன சோதனை!

என் பெயர் பாலு. நான் இந்த ஊருக்கு வரும்பொழுதே  அழுதுட்டு தாங்க வந்தேன். ஏனென்றால்  எனக்கு இங்க யாரையும் முன்ன பின்ன தெரியாது. சித்ரா வை போய் பாரு , வேலை குடுப்பாங்கன்னு சொல்லி அனுப்சுவிட்டுடாங்க. அவங்கள நான் பார்த்தது கூட கிடையாது. அவங்களை பார்த்தேன். நல்லவங்களா  தான் தெரிஞ்சாங்க. ஆனா யாரையும் நம்ப முடியாதுலீங்களா... கொஞ்சம் அளவா தான் பழகினேன்.. கொஞ்சம் பயமா இருந்தது. அவங்க வீட்ல நான் யார்கிட்டயும் அதிகம் பேச கூட மாட்டேன். என்ன அவங்க வீட்லயே ஒரு தனி ரூம் ல தங்க சொல்லிடாங்க..



சித்ரா ங்கறவங்க பெரிய வேலைல இருகிறதா சொன்னாங்க.. ஆனா, எப்பவும் வீட்ல தான் இருக்காங்க.. இவங்க எனக்கு என்ன வேலைபோட்டு  குடுக்க போறாங்களோன்னு சந்தேகமாத்தான் இருக்கு...




என்ன குடும்பம் யா அது?. என்ன யாரும் என் பேர் வெச்சி கூட  கூப்பிடறது இல்ல. வாய்க்கு வந்தத கூப்பிடறாங்க... எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.. அவங்க வீட்ல நாலு பேரு தான் இருக்காங்க.. ஒரு நாள் கூட, அவங்க சாப்பிடும்போது என்ன கூப்பிட்டதில்ல. தனியா தான் எனக்கு என்னிக்குமே சாப்பாடு.என்ன செய்றது, இவங்க எல்லாம் அப்படி தான்னு விட்டுட்டேன்..
எப்பவுமே எனக்கு தெரியாம, யாரவுது என்ன கவனிச்சிட்டு இருக்காங்க.. ஒரு வேளை இவன் ஒழுங்கா  வேலை செய்வானான்னு அவங்களுக்கு சந்தேகமாயிருக்கும்னு நினைக்கிறேன்.





இப்படியே, எனக்கு என்ன வேலை , அவங்க என்ன வேலை செய்றாங்க, இதெல்லாம் மர்மமாகவே இருந்தது. திடீர்னு ஒரு நாள், வெளியில போயிருந்தப்போ, என்ன ஒருத்தன், பயங்கரமா கத்தி போல எதையோ வெச்சி குத்த வந்தான். நானும் அவன எதிர்த்து பார்த்தேன். முடியல. இவங்க எல்லாம் எனக்கு உதவி கூட பண்ணாம, எதையும் பார்க்காதவங்க மாதிரி இருகாங்க. நல்ல வேளை, பெருசா எதும் இல்ல, சின்ன காயம் தான். என் திறமையை சோதிக்க இவங்களே அனுப்ச்ச ஆளா இருக்கும்னு நினைக்கிறேன்... ஐயோ, தோற்று போய்டோமே, வேலை குடுக்காம போயிடுவாங்களோ!...





மறுநாள், பாலு  "கடவுளே, என்ன ஏன் இந்த கொடுமைகாரங்க கிட்ட அனுப்ச்ச!..." என்று புலம்பிய போது, "பாலு , நீ பொறந்து ஒரு வாரம் தான் ஆகுது. உன் தாயார் சித்ரா, உன்ன நல்லா  பார்த்துப்பாங்க.. அவங்க எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான். நீ வளர வளர அது உனக்கே புரியும். இப்போ நிம்மதியா தூங்கு" என்று இறைவன் பதில் சொன்னார். அதை கேட்ட பாலுவின்  முகத்தில் ஒரு சிறு புன்னகை.
"ஹே, சீக்கரம் இங்க வந்து பாருங்களேன்.. முதல் முறையா சிரிக்கிறான். நல்லா  இருக்குல்ல!... நேத்து போட்ட தடுப்பூசினால , ரொம்ப அழுவானோன்னு நெனச்சேன்.. நல்ல வேளை normal ஆ தான் இருக்கான்.. " என்று சித்ரா அவளின் அம்மா, அப்பா, கணவரிடம் கூறினாள்.