Me and My Pen

Thursday, May 8, 2008

இது ஒரு காதல் கதை

அருண் and அஞ்சலி - இவங்க தாங்க நம்ம கதையோட நாயகன் மற்றும் நாயகி. ஒரே காலேஜ் ல் படித்து வந்த இவர்களை, பழக வைத்தது என்னவோ அந்த Electronics lab தான். ஆனால் இவர்களின் காதல், இவர்கள் இருவருமே சேர்ந்து எடுத்த முடிவு தான். நம்ம கதாநாயகி அஞ்சலி, தீர்கமான முடிவு எடுபவள். நிறைவான பொருளை, குறைந்த வார்த்தைகளால் வெளிபடுதுபவள். "Love today" படத்துல சொல்வது போல, அழகு, அறிவு, அன்பு, அடக்கம் அனைத்தும் உடையவள்.
அருண் நிறைய பேசுவான். நன்கு படிப்பான். மிக புத்திசாலி. புதிசாலிகளுக்கே உரிய பிடிவாதம், தைரியம், கர்வம் அனைத்தும் நம்ம ஹீரோ வுக்கும் உண்டு.
ஒருவருக்கு ஒருவர் சொல்லாமலே இருவரும் புரிந்துகொண்டது தான் இவர்களது காதல். பெரியவங்க கிட்ட சொல்லும் நேரம் வந்துடுச்சு னு final year வந்ததும் realize செய்தனர் நமது ஜோடி. அஞ்சலியின் முடிவுகளின் மேல் அவளின் பெற்றோருக்கும் மிகுந்த மதிப்பு இருந்தது. ஆனால் நம்ம அருண் வீட்ல அப்படி இல்லீங்க. காதல்னாலே தடா. அதுலயும் வேற caste பெண்ணுக்கு என்னலாம் சொல்லியிருபாங்கனு உங்களுக்கே தெரியும். "அவங்களே அப்படி சொல்லும் போது நாம மட்டும் என்ன மட்டமா? நீயே யோச்சிக்கோ" என்று அஞ்சலியின் பெற்றோரும் ஒரு போடு போட்டனர். ஏகப்பட்ட பிரச்சனைக்கு பிறகு, முடிவு அஞ்சலியிடம். அருணின் வீட்டைவிட்டு அவனை மட்டும் அழைத்து செல்ல மனமில்லாமல் பிரிந்து விடலாம் என முடிவு எடுத்துவிட்டாள் அஞ்சலி. பெற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காண அவள் விழையவில்லை. இதில் சிறிதும் விருப்பமில்லாமல், தன் பெற்றோர்களையும் சமாதானப்படுத்த முடியாமல், அஞ்சலியையும் விட முடியாமல், குழம்பி போன நிலையில், தன்னால் முடிவெடுக்க முடியாது என்பதை உணர்தான். அஞ்சலியின் முடிவை தானும் ஏற்றுகொண்டான். சிறிது வருடங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல், ஆனால் எடுத்த முடிவில் சிறிதும் மாறாமல் அவர்களின் வாழ்வை சுவையின்றி, நாட்களை கழித்து வந்தனர். ஒவொரு நாளிலும், ஒரு முறையாவுது ஒருவரை ஒருவர் நினைக்காமல் இருந்ததில்லை.
காதல் மலர்ந்ததும் அருணின் கர்வம் அழிந்தது. காதல் பிரிந்ததும் அவனின் பிடிவாதம் ஒழிந்தது. ஒரு வார்த்தைக்கு மேல் அவன் இப்பொழுதெல்லாம் பேசுவதே கிடையாது. மொத்தத்தில் அவன் அவனாக சிறுதும் இல்லை.
ஒரு நாள் அஞ்சலிக்கு அருணிடமிருந்து ஒரு e-mail. தனக்கு திருமணம் என்றும், அஞ்சலி கண்டிப்பாக கல்யாணத்திற்கு வந்து வாழ்த்த வேண்டுமென்றும் எழுதியிருந்தான். மேலும், கல்லூரிக்கு பிறகு தன் வாழ்கையில் என்னென்ன துயரங்கள், மாற்றங்கள் நடந்தது என்றும், தன் would-be அபிராமியை எங்கு சந்தித்து, எவ்வாறு பழகினான் என்றும் சுருக்கமாக எழுதி இருந்தான். பின் குறிப்பாக "வாழ்வில் சிலதை மறப்பது கவலையை குறைக்கும் என்றால், அதை செய்வது தவறில்லை. நீயும் அதை அறிந்து நடப்பாய் என நம்புகிறேன்" என்று முடித்திருந்தான். கடிதத்தை படித்து மிகுந்த யோசனையில் ஆழ்ந்தாள் அஞ்சலி. இது நாள் வரையில் எதற்கு காத்திருந்தோம் என தெரியாமலே காத்திருந்த அஞ்சலி, தனக்கும் ஒரு துணை தேவை என்பதை உணர்ந்தாள். ஒரு முடிவும் எடுத்தாள். அவள் நேரே "இறைவன் இல்லம்" சென்றாள். ஒரு 3 மாத குழந்தையை தத்து பிள்ளை ஆக்கினாள். ஆம், ஒரு குழந்தை தான் அவள் நினைத்த துணை. அவன் தான் அர்ஜுன். சில வருடங்களுக்கு பிறகு, "அம்மா நா ஸ்கூலுக்கு போயிடு வரேன்" என்று அர்ஜுன் ஓட, அவனிடம் அருணிடம் கண்ட அதே பிடிவாதம், கர்வம், புத்திசாலித்தனம் கண்டு மகிழ்ந்தாள் அஞ்சலி. அர்ஜுனிடம் அவள் அருனைதான் தினம் தினம் பார்க்கிறாள்.
தனியாக வாழ்வது ஒரு ஆணுக்கு வேண்டுமென்றால் எளிதாய் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினம் என்பதை உணர்ந்துதான், அன்று அப்படி ஒரு இல்லாத கல்யாணத்திற்கு அழைத்திருக்கிறான் அருண். இப்படி சொன்னாலாவது அஞ்சலி ஒரு துணையை நாடுவாள் என நம்பினான். தன் வாழ்க்கையை இப்படியே "பொது சேவை" யில் ஈடுபட்டு கழித்துவிடலாம் என்று முடிவு எடுத்துவிட்டான். இப்பொழுது ஆதரவை நாடி தன்னிடம் வரும் அனைவருமே அவனுக்கு அஞ்சலி யை போல தான் தெரிகிறார்கள். அதிலேயே தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் அருண். இனி அருணையும் அஞ்சலியையும் யாராலும் பிரிக்க முடியாது என்ற மன நிம்மதியில் அருணும் அஞ்சலியும் தனி தனியே வாழ்ந்து வந்தனர்.

Tuesday, May 6, 2008

இதற்க்கு பெயர் தான் காதலா!

பார்வதி என்பவர் "பார்வதி இல்லம்" தனில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண்மணி. வயது மட்டும் இல்லை, பொருளாதர நிலையிலும் நடுத்தர வர்கமே. இவருக்கு வயது ஒரு நாற்பது இருக்கும். "பார்வதி காபி கொண்டு வா" ஆம் இது அவரின் கணவர் லிங்கம். "இதோ வந்துட்டேன்.. சாக்கர் கூட இல்லாத காபிய எப்படி தான் குடிகிரீன்களோ !!" என்று சொல்லிக்கொண்டே கொண்டு வந்து கொடுத்தார் பார்வதி.

"உப்பு கம்மியா காரம் கம்மியா செய்வியே ஒரு சாம்பார், அதுக்கு இது பரவாயில்லடி" என்று நக்கலோடு எதிர் வாதமிட்டார் லிங்கம். Sugar, BP னு வகை வகையான வியாதிகள் லிங்க திடம் உள்ளன... அவர் எந்த எந்த நேரத்தில், என்ன செய்யவேண்டும், என்ன சாப்பிட வேண்டும் னு பார்த்து பார்த்து செய்யறது பார்வதியின் முக்கிய வேலை.. சமையல், வீடு சுத்தம் செய்வதெல்லாம் கூட பிறகு தான். காலையில் ஆறு மணிக்கு அவரை எழுப்பி, வாக்கிங் போக சொல்லி, வந்தவுடன் காபி, குளியல், டிபன் என்று பார்த்து பார்த்து செய்யும் பார்வதி கு என்றும் லிங்கத்திடம் இருந்து திட்டு மட்டும் தான். உன் சமையல் ல இது இல்லை, அது இல்லை னு...

"வெளியில் சென்று சாப்பிட வீட்டில் full தடா" என்று நண்பரிடம் போலம்பினால் கூட, அதை மீற என்றுமே நினைத்ததில்லை நம்ம லிங்கம்.

குழந்தைகளை பற்றி இன்னும் ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் என்னும் முன், பார்வதி கு ஒரு குழந்தை, பெயர் லிங்கம், வயது 46. லிங்கத்திற்கு ஒரு குழந்தை, பெயர் பார்வதி, வயது 40. இவர்கள் இருவருக்கும் இவர்கள் மட்டுமே குழந்தைகள்.. அதனால் தான் என்னவோ, தன் முழு அன்பையும், கவனத்தையும் லிங்கத்திடம் மட்டுமே செலுத்தி வந்தார் பார்வதி.

அழகாக சென்று வந்த அவர்களின் அமைதியான வாழ்க்கையை , ஒரு போன் நிலைகுலைய வைத்தது.. லிங்கத்தின் ஆபீஸ் லிருந்து வந்த போன் தான் அது. தீடீரென்று லிங்கத்திற்கு மாரடைப்பு வந்ததாகவும், மருத்துவமனை அழைத்து சென்றிருபதாகவும் தகவல். ஒரு நிமிடம் பார்வதியின் சப்த நாடியும் நின்றுவிட்டது.

மருத்துவ மனைக்கு விரைந்தோடிய பார்வதியின் மனதில் 1000 இற்கும் மேலான குழபங்கள். பணத்திற்கு என்ன ஏற்பாடு செய்வது, பேங்க் இப்போ ஓப்பன் ஆயருகுமா, பக்கத்து வீடு சுபத்ரா விடம் கொஞ்சம் கேட்பதா, என்று ஏக பட்ட கேள்விகள். கருமாரியம்மன் கோயிலுக்கு கரகம் எடுக்கணும், ஹனுமார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யணும் னு பல வேண்டுதல்கள்... லிங்கதிற்கு ஒன்றும் ஆகாது என்று அவர் உள் மனசு ஆழமாக சொல்லியிருக்கும் போல, அவர் கண்களில் நீர் வர மறுத்தது... இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு, "எதோ Angeo plast செய்யனுமம்.. 50,000 செலவாகுமாம்... செஞ்சதுக்கு அப்புறம் திருப்பியும் test எடுபான்களாம். சரி ஆகலைன ஆபரேஷன் பண்ணனுமாம்" என்று சுபத்ரா விடம் சொல்லிகொண்டிருந்தார் பார்வதி...

Angeo Plast இற்கு தேவையான பணத்தை, பேங்க், RD, முதலியவை வைத்து சமாளித்து விட்டார். 2 வாரங்கள் ஆகின Angeo plast schedule செய்து முடிபதற்கு. மருத்துவர் Operation செய்தாகவேண்டும் என்று கூறியதும், சோகத்தில் ஆழ்ந்தார் பார்வதி. "ஒரு லட்சம் தானே, என் பையன லோன் போட்டு தர சொல்றேன். பகவான் கண்டிப்பா உன்ன கை விட மாட்டார் " என்று ஆறுதல் கூறினாள் சுபத்ரா. மனம் நொந்த பார்வதியின் ஒரே நம்பிக்கை கடவுள் தான். வேண்டுதலின் எண்ணிக்கை அதிகரித்து.. 1 வாரத்தில் operation schedule செய்திருந்தார்கள்.
இந்த 3 வாரங்களாக பார்வதி லிங்கத்தின் அருகில், இல்லைஎனில் கோயிலில் சிவ லிங்கத்தின் அருகில் மட்டுமே இருந்தார்.
இன்று operation நாள். இன்றும் ஒரு வித தைரியத்தில் தான் இருந்தார் பார்வதி. இரண்டு மணி நேரத்தில் ஆபரேஷன். Operation theatre அருகில், டாக்டர்ஸ், நர்ஸ், என்று இங்கும் அங்கும் போய் கொண்டிருந்தனர். கடவுளே சரணாகதி என்று ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் பார்வதி.

இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டிய Operation, 3 மணி நேரம் ஆகியும் முடியவில்லை. அந்த ஒவொரு வினாடியும் பார்வதி தன் கணவனின் உயிரை காப்பாற்ற தனக்கு மிஞ்சிய பிரார்த்தனைகளை செய்து வந்தாள். Theatre கதவு திறந்தது. Operation success ஆனா மகிழ்ச்சியில் பார்வதியிடம் வந்த மருத்துவர் அதிர்ச்சியில் நின்றுவிட்டார். எமன் அன்று அங்கு வரவேண்டும் என்று எழுதி இருக்கிறது போலும். அதை மாற்ற யாரால் முடியும். மாரடைபினால் பார்வதி தன் உடலை அங்கேயே விட்டு பிரிந்திருந்தாள்!

தன் வயதாலும், மனசாலும் தாங்க முடியாத அளவு வருத்தத்தையும், மன உடைச்சளையும், பயத்தையும் தனக்குள்ளேயே தாங்க முயன்ற பார்வதியின் இதயம் அதை தாங்க மறுத்துவிட்டது. "sudden severe heart attack" என்று மருத்துவர் லிங்கத்திடம் எப்படி சொல்வது என தடுமாறி, முடிந்த வரை மறைத்து, இறுதியில் சொல்லிவிட்டார். பார்வதிக்கு இந்த நேரத்தில், தைரியம், ஆறுதல் கொடுக்க யாருமில்லையே என்று முதல் முதலாய், தனக்கொரு பிள்ளை இல்லை என வருந்தினார் லிங்கம்.

இனி என் செய்வது என்ற பயம், தனிமையின் மன உடைசல், பார்வதி பிரிந்த வருத்தம் இவை எல்லாம் தன்னை சூழ்ந்த நிலையில், பார்வதி அனுபவித்த அனைத்தையும் தானும் அனுபவிப்பதை உணர்ந்த லிங்கம், பார்வதி இடம் சிறிது காலத்திலேயே சென்று விடுவோம் என்ற சந்தோஷத்தோடு, புன்னைகைத்தார். "என்ன எப்போ டிச்ச்சர்ஜ் பனுவீங்க" னு மருத்துவரிடம் கேட்டார்.

Friday, May 2, 2008

Ennidamirundhu Sila Thuligal :)

எதிர்த்து பேச முடியாத வார்த்தைகள், வழிந்தன கண்ணீராய்.
(--- பெண்ணின் கண்ணீர்)


அமர்ந்த இடத்திலே மனித பூங்கா கண்டன விலங்கியல் விலங்குகள்...
(--- வித விதமான மக்கள் கூட்டம் விலங்கியல் பூங்காவில் காணும் விலங்குகள்.)

அமெரிக்கா வின் Socialism குளிர் கால மரங்களிடம் மட்டும்.
வெள்ளை பூக்கள் மட்டுமே அனைத்து மரங்களிலும்.
(--- இலைகள்ளுக்கு பதிலாக பனி மட்டுமே படர்ந்த மரங்கள்.)

PS: Romba olaren nu nenaikireengala!!